பக்கம் எண் :

650மரபியல்

விற்கு வருங்கால் உழைக்குப்போலச் 1சிறுவரவிற்றன்றி வரும் என்றவாறு.

“புல்வா யிரலை நெற்றி யன்ன.”

(புறம். 374)

எனவும்,

“கவைத்தலை முதுகலை காலி னொற்றி.”

(குறுந். 213)

எனவும்,

“கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை.”

(அகம். 97)

எனவும்,

“மைபட் டன்ன மாமுக முசுக்கலை.”

(குறுந். 121)

எனவும் வரும்.

முசுவிற்கு நிலைபெற்றதெனவே, அத்துணை நிலைபேறின்றிக் குரங்கிற்கு வருவனவுங் கொள்க. அது,

“கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென.”

(குறுந். 69)

என வருமாற்றான் அறிக.

(46)

[மோத்தை முதலிய நான்குபெயரும் யாட்டிற்குரிய எனல்]

602. மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
யாத்த வென்ப யாட்டின் கண்ணே.

இ--ள் : இக்கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய என்றவாறு.

அவை,

“வெள்யாட்டு மோத்தை.”

எனவும்,

“தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த.”

(அகம். 101)

எனவும்,

“உதள,
 நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்.”

(பெரும்பாண். 151--2)

எனவும் வரும்.


1. சிறுவரவிற்றன்றி--பெருவரவிற்றாய்.