அஃதேல், உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடாமா றென்னையெனின், அவ்வுருவுபற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும். நிறையென்பது, மறைபிறரறியாமை (கலி. 133) நெஞ்சினை நிறுத்தல். அருளென்பது, எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல்; அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு. உணர்வென்பது, அறிவுடைமை; அஃதாவது, உலகியலாற் செய்யத்தகுவது அறிதல். திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி. அது 1வினையுளுடைமை யெனவும்படும். இவையெல்லாம் இருவர்க்குந்தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு. ‘வகை’ என்றதனான், ஆண்மை பெண்மை என்பது பிறப் பொப்புமையெனவும், குடிமை வகையென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகையென்பது அந்தணர்க்கு 2நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ‘ஏவன் மரபி னேனோர் பாங்கினும்’ (24) ‘அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினும்’ (23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது. அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினும் (23) வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினாற் கொண்டான், அவை பிறழ்ந்து வருமாகலி னென்பது. உதாரணம், “அவனுந்தா னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத்
1. வினையுளுடைமை--தீவினைக்காலத்தும் செல்வம் உடையர் போலிருத்தல். 2. நான்கு--நான்குவருணத்தும் பெண்கோடல் உரித்தாதல், ஏனையவுமன்ன. |