பக்கம் எண் :

10நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொருள் நிலமும் பொழுதுமென்றிருவகைப் படுமென்பது நாலாஞ் சூத்திரத்தாலும் விளக்கப்பட்டன. ஐந்தாஞ் சூத்திரத்தில்நிலமுதற்பொருளின் இயல்பும் வகையும் கூறப்பட்டன. 6 முதல் 11 வரையுள்ள ஆறு சூத்திரங்களால் காலமுதற்பொருள் அன்புத்திணை ஐந்தனொடு பொருந்தும் இயைபு விளக்கப்பட்டது. 12, 13ஆம் சூத்திரங்களில் அகவொழுக்க வகைகளும் முதற் பொருளின் கூறுகளும் முன் விளக்கிய முறையேயன்றி வேறுபட்டுத் தம்முள் விரவி வருதலுமுண்டெனக் குறிக்கப்பட்டது. 14ஆம் சூத்திரத்தில் உரிப்பொருட்குச் சிறந்த ஒத்தகாதல் ஒழுக்கச் சிறப்புவகை யைந்தனியல்பும், 15, 16ஆம் சூத்திரங்களில் அவ்வைந்தனுளடங்காது அவைபோலவே சிறப்புடைய பொதுவகை அகவொழுக்கங்கள் சிலவும் கூறப்பட்டன. 17ஆம் சூத்திரம் உரி கருப்பொருள்கள் பலவேறு வகைப்படுவன போலன்றி, முதற்பொருள் நிலம்பொழுதிரண்டே வகைப்படுமென்பதை வலியுறுத்துகிறது. 18, 19ஆம் சூத்திரங்கள் அகப்பொருள் வகை மூன்றனுள் எஞ்சிய கருப்பொருள் வகைகளும் முறையே அகவொழுக்கங்களுக்கு ஏற்ற பெற்றி இயைந்தும் இயையாமலும் வருமாறு கூறும்.

20 முதல் 24 வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்க மரபுகளுக்குப் பலதிறப்பட்ட தமிழ் மக்களின் உரிமை விளக்கப்பட்டது. 25 முதல் 33 வரையுள்ள சூத்திரங்களில் அகவொழுக்கங்களிற் பெருவரவிற்றாய பாலை, பிரிவின் நோக்கம்பற்றி அறுதிறப்பட்டு ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வகுப்பினருக்குச் சிறந்து பொருந்துமியைபுடன் விளக்கப்பட்டது. 34ஆம் சூத்திரத்தில் கடற்செலவும், 35ஆம் சூத்திரத்தில் மடற்றிறமும் மடவார்க்குக் கடியப்படுந் தமிழ்மரபு சுட்டப்படுகிறது. 36 முதல் 42 வரையுள்ள சூத்திரங்களில் தாயர். தோழி, கண்டோர், தலைவன் மற்றையோர்களுக்கு அகத்துறையில் கூற்று நிகழ்தற்கேற்ற இடங்கள் கூறப்பட்டன. 43, 44ஆம் சூத்திரங்கள் முன் 15, 16இல் கூறிய பெருவரவான உரி ஒழுக்கம்போல் ஐந்திணையிலக்கணத்திலடங்காது, சிறுவரவிற்றாய் உரிப்பொருட் டுறைகளாகுமிரண்டைச் சுட்டுகின்றன. 45ஆம் சூத்திரம் உரிப்பொருட் புறனடையாய், முன் சுட்டியவற்றுளடங்காது உரிப்பொருளாதற்குப் பொருந்திய பிறபல, மரபு முரணாவாறு வருவனவுமுள, வெனக்கூறுகின்றது. 46 முதல் 49 வரையுள்ள சூத்திரங்கள் அகத்துறைகளுள் உள்ளுறையும் பிறவுமாய உவமங்கள் பயிலுமாறு கூறுகின்றன. 50ஆம் சூத்திரம் கைக்கிளை இயலையும்,