தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 13 |
குறிப்பு : இதில் ஐந்திணை எழுவாய்; பாத்திய பண்பே பயனிலை; ‘ஒழிய’ என்னும் வினையெச்சம் ‘பாத்திய’ எனும் பெயரெச்சங்கொண்டும், அப்பெயரெச்சம் ‘பண்பே’ எனும் பெயர்கொண்டும் முடிந்தன. வையம், பாத்திய என்னும் வினைக்குச் செயப்படுபொருள். வையம் ‘நானிலம்’ எனப்படுதலானும், அது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலெனத் திணைக்குரிய நிலத்தியல்பு பற்றிப் பகுக்கப்படுதலானும், பாலைக்குத் தனித்துரிய நிலம் பிறிதின்மையானும், முல்லை முதல் நெய்தலீறான நிலங்களையே அவ்வத்திணைக்களனாகப் பொருள் நூலுடையார் கொள்ளுதலானும், வையத்தை நாற்கூறாகப் படுத்த இயல்புடைத்து பாலை யொழிந்த நாலுதிணையும் என்பதை இச்சூத்திரம் விளக்கிப் போந்தது. இதனால் திணையே அகவுரிப்பொருளாய், அதற்குப் பொருந்த நிலம் பிரிவு கொண்டது என விளக்கப்பட்டது. சூத்திரம் : 3 | | | முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை. |
கருத்து : இது, அகப்பொருள் முதல் கரு உரி என முத்திறப்படும் மரபு கூறுகிறது. பொருள் : பாடலுட்பயின்றவை நாடுங்காலை = புலவர் செய்யுளில் வந்து பயிலும் வழக்குகளை ஆராயுங்கால்; முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே = முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளென வகுத்த மூன்றுமே; நுவலுங்காலை முறைசிறந்தனவே = செய்யுளுக்குரிய புலனெறி வழக்கம் கருதுங்கால் முறையே ஒன்றினொன்று சிறந்தனவாம். குறிப்பு : முறை சிறந்தன என்பதனால் முதலிற் கருவும், கருவின் உரியும், ஒன்றினொன்று முறையே மேற்சிறப்புடைத்தாமெனவும், சிறந்தன என்பதனால் சிறவாப் பிறபொருளும் உளவாமெனவும் பெறுதும். அகப்பாட்டுக்களில் உரிப்பொருளே தலையாய தென்பதும். அதற்கு முதலுங் கருவும் சிறப்புதவுந்துணையாகச் சார்ந்துவருபொருள்களா மென்பதும் வெளிப்படை. இனி, இம்மூன்றுமேயன்றி இவைபோலச் சிறவாத பிறபொருளும் உளவாதல் அகத்திணையியல் “மரபுநிலை திரியா |