பக்கம் எண் :

148நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஐந்திற்கும் ஒத்த உரிமையோ டொன்றிப் பயிலும் என்பதை உரைகாரரும் கூறுகின்றனர். அதனால், அவற்றிற்கு மேற்கோள் மிகையாகும்.

சூத்திரம் : 52 
 நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்,
கலியே பரிபாட் டாயிரு பாவினும்
உரிய தாகும், என்மனார் புலவர்.

கருத்து : இது, உலகியல் வழக்கொடுபட்டதே புலனெறி வழக்கம் என்பதையும், அன்புத்திணைக்குச் சிறந்துரிய பாட்டு வகையும் கூறுகிறது.

பொருள் : நாடக வழக்கினும் = உலகியலை ஒட்டி உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும் ‘பொருநு’ வகை மரபுகளோடும்; உலகியல் வழக்கினும் = உலக மக்களின் ஒழுகலாற்றொடும்; பாடல் சான்ற புலனெறிவழக்கம் = சிறப்புறப் புலவரால் அமைக்கப்படும் அகத்திணை மரபுகள்; கலியே பரிபாட்டாயிரு பாவினும் = கலியும் பரிபாடலுமாகிய இரு பாவகைகளிலும்; உரியதாகும் = சிறப்புரிமை கொண்டு பயிலும்; என்மனார் புலவர் = என்று கூறுவர் பொருள்நூற் புலவர்.

(பொருந் = நடிப்பு; ஒருவர்போல நடிப்பது. )

குறிப்பு : புலவராற் பாடப்பெற்ற அகத்துறை மரபுகள் உலகியலைத் தழுவி அமைவதே இயல் நெறியின் இன்றியமையாக் குறிக்கோளும் பயனுமா மென்பதை இச்சூத்திரம் வற்புறுத்துகிறது. மக்கள் வாழ்க்கையொடு தொடர்பற்ற புலனெறி வழக்கம் எதுவாயினும் பயனும் சுவையும் பயவாது. அதனால் உலகியல் வழக்கொடு அகத்திணைப் புலனெறி வழக்குத் தழுவி நடக்கும் என இதிற் கூறப்பட்டது.

நாடகம் மக்கள் வாழ்க்கையையே உயரிய குறிக்கோளோடு இயைத்துச் சுவைபட நடித்துக் காட்டும் நோக்குடையதாய் உலகியலொடு ஒன்றுபட்டு ஒழுகுவதேயாமாகலின், உலகியல் வழக்கொடு நாடகவழக்கும் உடன் கூறப்பட்டது. உலகியல் வழக்கு, உள்ளவாறுலகத்தார் ஒழுகலாறாம். அவ்வாழ்வொழுக்கச்