150 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
சுட்டுதலாகக் கொண்டு அத்தன்மை நுதலிய எனக் கொள்ளுதலும் ஒன்று. தலைமக்கள் இருபாலோருள் எவரும் தம் பெயர் சுட்டி அகவப் பெறாராதலின், இருபாற்கு முரித்தாகிய ‘ஒருவர்’ என்னும் பொதுப் பெயரால் அம்மரபு கூறப்பட்டது. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ என்பதனால், அளவளாவிற் அகவிச் சுட்டாது பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப் பெறுதல் தவறாகாதென்பதை, இளம்பூரணர் கொண்டபடி இதில் குறிப்பெச்சத்தாற் கொள்ளவிட்டு ஐயத்திற்கிடம் வையாமல், தொல்காப்பியர் அடுத்த சூத்திரத்தில் தெளியக் கூறுவர். சிலப்பதிகாரம் சிந்தாமணிபோன்ற பண்டைச் செய்யுட்களில், யாண்டும் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அகவி அளவளவுதல் கூறப்பெறாமையும், அவ்வாறு அளவுதல் குறியாப் பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதலும் ஈண்டுக் கருதத்தக்கன. காதலாற் கலந்தார்க்கு, “ஈருயிரென்பர் இடைதெரியார், ” அவர் தம்முள் ஓருயிராக உணர்வாராதலின், அவ்வுணர்ச்சி வயப்பட்டாருள் ஒருவர் ஒருவரைத் தம்மில்வேறுபட்ட பிறர்போலப் பெயர்சுட்டியளவுதல் இருமை நீங்கிய அவர் ஒருமைக் காதலுணர்ச்சியோடு இயைவதன்று; ஆதலின் அவ்வாறு அளவுங்கால் ‘என்னுயிர்’ ‘என்கண்’ என்பன போன்ற வேறன்மையை விளக்குங் தற்கிழமைக் காதற்குறி யீடுகள் கூறி யளவுதலே இயல்பாகும். (1) | “இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே; இவன்வயிற் செலினே இவட்கும் அற்றே; காக்கை யிருகணின் ஒருமணி போலக் குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவா ழுயிரே. ” |
(2) | “காணா மரபிற் றுயிரென மொழிவோர் நாணிலர், மன்ற பொய்ம்மொழிந் தனரே; யாஅங் காண்டுமெம் அரும்பெற லுயிரே; |
|