160 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பகைவர்நாட்டு ஆனிரைகளைக் களவிற் கொள்ளும் ஒழுக்கமாகும். போர்துவங்கிய பின் ஆகோள் கொண்டியாவதன்றி வெட்சியாகாது. அடையலர்க்கு அமர்க்குறிப் பறிவித்துப் படைதொடச் செய்து அவர்மேற் செல்வதே போரறமாதலின், அமரறிவிப்பான் பகைப்புலத்துஆகோடலைப் போர் தொடங்கும் மரபாக் கொண்டனர், பண்டைத் தமிழரும் பிறரும் பண்டைக் காலத்தில். களவில் ஆகொளவரும் முனைஞரைத் தடுத்து நிரை காவலர் மீட்க முயல்வதும், அவரொடு நிரைகொள்வார் பொருவதும் வேறு திணையாகாமல் ஆகோளின் இடை நிகழ்ச்சிகளாயடங்கும் இயல் கருதி அவற்றை “அனைக்குரி மரபிற் கரந்தை’ என வெட்சித் துறைகளில் அடக்குவர் தொல்காப்பியர். அதுபோலவே போர்த் தொடக்கமாம் கொடிநிலை, கொற்றவை நிலை போல்வனவற்றையும் பிற பல துறைகளையும் வெட்சியிலடக்கிக் கூறினர். அவ்வாறு போர்துவக்கும் ஒழுக்கவகைகளனைத்தும் வெட்சி யெனப்பட்டு, மறனுடைமரபின் அமரறத் தொகுப்பாம் புறத்திணைவகையுள் முதற்கண் கூறப்படுகின்றன. பிறகு, பகையடப் படையொடுமேற் செல்லும் வஞ்சித் திணையை அதன்வகை துறைகளொடு 6 முதல் 8 வரையுள்ள சூத்திரங்கள் விளக்குகின்றன. அதையடுத்து, வேற்றுப்புலத்துப் படைகொடு செல்வோர் மாற்றலர் இருக்கையையெய்தி மலையுமுன் தம் ஆற்றிடை அகநாட்டுப் படையரண்களை எறிதல் அல்லது அகப்படுத்தல் அமர் வென்று தாம் மீள இன்றியமையாதாகலானும், அடையலரின் இடையரண்களை முற்றி எறிதலும் கோடலும் அவர்கட்கு வேண்டப்படுமாகலானும், அவ்வொழுக்கமாய உழிஞைத்திணையும் அதன்வகை துறைகளும் இவ்வியலில், 9 முதல் 13 வரையுள்ள சூத்திரங்களால் தெளிக்கப்படுகின்றன. முற்றுவோர் முயற்சியை அரண்காவலர் முரணாதுதடுப்பதும், அக்காவலர் எதிர்ப்பைக் கடந்தடக்கியன்றி அரண்எறிதல் கூடாமையும் இயல்பாகும். முற்றுவாரின்றி மதில் காவற்போர் நிகழுமாறில்லை யாகலானும், முற்றியெறிவாரின்றி வாளா அரண்காத்திருத்தல் நொச்சியெனக் கருதப்படாதாகலானும், அரண் எறிமுறையின் ஒருதிறனா அடங்கும் முற்றெதிர்ப்பைப் பிற்காலத்தவர் போல வேறு பிரித்து நொச்சியெனத் |