தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 177 |
இனி, ‘துடிநிலை’ யென்னுமிடத்துக் ‘குடிநிலை’ என இளம்பூரணர் கொண்ட பாடத்தின் பொருத்தம் புலப்படவில்லை. ‘ஆகோள்’, ‘கொற்றவைநிலை’களைப்போலக், ‘குடிநிலை’ போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாத தன்று. இவ்வியலின் பின் ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும்’ துறைகளெனக் கூறப்படுவன மூன்று. அவற்றுள், முதலது கொடிநிலை (புறத்திணை சூ. 33) அஃதொழிந்த மற்றிரண்டும் புறத்திணைத் துறைகளாக முன் வேறு சூத்திரங்களில் விளக்கப்பெற்றுள்ளன. அவற்றோடு அவ்வாறு புறத்திணை எதற்கும் துறையாக யாண்டும் விளக்கவோ சுட்டவோ பெறாத கொடிநிலையை வாளாகூட்டி, ஒருபரிசா யெண்ணுதல் அமைவுடைத்தன்று. புறத்துறைகளாக வேறு சூத்திரங்களில் விளக்கப்படும் இரண்டனொடு பின் சூத்திரத்தில் கொடிநிலை வாளா கூட்டிக் கூறப்பெறுதலால், அவையொப்பக் கொடிநிலையும் புறத்துறையாம் பரிசு பிறிதிடத்தில் சுட்டப்பெறுதல் முறையாகும். அதனாலும், கொடியெடுப்பு போர் துவக்கத்தில் நிகழ்வதொன்றாதலானும், கொடி நிலையைக் கொற்றவை நிலையோடு வெட்சி வகையாய் இதில் தொல்காப்பியர் கூறினார் எனக்கொள்ளுதலே சிறக்கும். அக்கொடிநிலைப் பாடம், நாளடைவில் ஏடெழுதுவோரால் குடிநிலையாக மாறி இளம்பூரணர் கண்டிருத்தல் வேண்டும். அப்பாடம் சிறவாமையால் அதனை பொருள் பொருந்தப் போர்க்குரிய துடிநிலையாக்கி நச்சினார்க்கினியர் பாடங்கொண்டதாகக் கருதற்கு இடனுளது. அன்றியும், ‘துடி’ சூறைசுட்டும் பாலைநிலப் பறையே யாதலானும், எல்லா நிலத்துக்கும் பொதுவான போர்ப்பெரு முரசுக்குப் பெயரன்றாதலானும், இங்குத் ‘துடிநிலை’ப் பாடத்தினும் ‘கொடி நிலைப்’ பாடமே சிறப்புடைத்தாதல் மலையிலக்காம். ஆகவே, இளம்பூரணரின் ‘குடிநிலை’ நச்சினார்க்கினியரின் ‘துடிநிலை’ எனுமிரு பாடங்களையும் கொள்ளாது, இதில் ‘கொடி நிலையே’ பாடமாக் கொள்ளின், பின் ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும்’ எனத் தொகுத்த மூன்றனுள் மற்றவற்றோடு கொடி நிலையைக் கூட்டிக் கூறிய பெற்றி இனிது விளங்கும். போர்க்குமுன் கொடியெடுக்கும் மரபுண்மையை, | “புள்ளும் வழிப்படாப் புல்லார் நிரைகருதிப் | | போகுங் காலைக் |
|