பக்கம் எண் :

178நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

 கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையும்
 
கொடு மரமுன் செல்லும் போலும். ”

என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி அடிகளாலும் அறிக.

சூத்திரம் : 5 
 வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும் உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூஉ
மாபெருந் தானையர் மலைந்த பூவும்,
வாடா வள்ளி வயவ ரேத்திய
வோடாக் கழனிலை யுளப்பட, வோடா
வுடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும்,
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்,
ஆரம ரோட்டலும், ஆபெயர்த்துத் தருதலும்,
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும்,
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்,
அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்,
வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தலென்று
இருவகைப் பட்ட பிள்ளை நிலையும்,
வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டும்,
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்,
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை, வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே.

கருத்து : நிரை கவரும் வெட்சிக்குரிய படையியங் கரவ முதலிய துறை பதினான்கு முன்கூறி, அஃதல்லாத ‘கொடிநிலை’, ‘கொற்றவைநிலை’ போன்ற போர்த் துவக்க வெட்சி வகையின் துறை இருபத்தொன்று இதில் விளக்கப்படுகின்றன.

[வெட்சி வகையுள் சிறந்த ஆகோளையும் அதன் துறை பதினான்கையும் முதல் மூன்று சூத்திரங்களில் விளக்கி, பிறகு போர்த் துவக்கத் திணையாகிய வெட்சியில் சிறந்து வரும் ஆகோளே யன்றிப் பொதுவாக வரும் கொற்றவை நிலை போன்ற வேறு வெட்சிவகை யுண்மை இதன் முன் சூத்திரத்தில்