தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 179 |
கூறப்பட்டது. அப் பிற வெட்சி வகைகளுக்குரிய துறைகளை இது சுட்டுகின்றது]. பொருள் : (1) வெறி யறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் = குறித்த போரில் கொற்றம் கருதிச் ‘செறுமிகு சேயா’ன முருகனை முதலில் பரவி, அவனுக்குரிய களியாட்டில் குறியுணர்ந்து கூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தளும். [இவ் வெட்சிக்கு நேரான குறிஞ்சித்திணையில், தன் களவை மறைத்துத் தனிமை யாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட தாயர் உண்மை யுணரவேண்டிக் குறி சொல்ல விரும்பியழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின் வேறாயது அக்குறிஞ்சிக்குப் புறனான வெட்சியில் வரும் துறையான வேலன் வெறியாட்டு என்பதை விளக்கவே இது வெறியாட்டு என்னாது, வெறியாடும் வேலன் விரும்பிச் சூடும் பூவின் பேரால் காந்தளெனக் குறிக்கப்பட்டது. எனவே, வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும், வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன்; குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு. இதனை மதுரைக் காஞ்சியில், புறத்தில் அகத்துறையாக, “அருங்கடி வேலன் முருகொடு வளைஇ ரிக்கூடு இன்னியம் கரங்கநேர் நிறுத்து ார்மலர்க் குறிஞ்சி சூடி” எனவரும் அடிகளானுமறிக. ] (2, 3, 4)உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்து புகழ்ப் போந்தை, வேம்பே, ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் = மாறுகொண்ட இருவேந்தர் பெரும்படை மறவர் தம்மை மலைவின்றித் தமரும் பிறரும் எளிதில் அறியும் வண்ணம் அடையாளமாகச் சூடும் சேரரது பனை, பாண்டியரின் வேம்பு, சோழர்தம் ஆத்தி என முறையே புகழோங்கி வரூஉம் பூக்களின் பேராலாய துறை மூன்றும், “இரும்பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் |