பக்கம் எண் :

182நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

உன்ன மரக்கேட்டால் நிமித்தங் கொள்ளுவது போலத், தானைமறவர் காயாம்பூவால் நிமித்தங்கொள்ளும் ஒரு பழவழக்குண்டு.

“பூவை விரியும் புதுமலரில் பூங்கழலோய்
 யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
 மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
 நிறத்தொடு நேர்தருத லான். ”

என்னும் வெண்பாமாலைப் பாட்டாலும் அது விளக்கமாகும்.

[பிற்காலத்தில், ‘பூவைநிலை’ சிறப்பாக மாயோனையும், பொது வகையில் பிற கடவுளரையும் ஒரு தலைமகனுக்கு ஒப்பிடும் துறையாகக் கருதப்பட்டு வருகிறது. இப் பொருளுக்கு,

“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
 மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்”

எனும் நக்கீரர் புறப்பாட்டை மேற்கோளாகக் கொள்ளுவர். இதில் பாண்டியன் நன்மாறனைக் கண்ணுதற்கடவுள், பலராமன், திருமால், செவ்வேள் என்னும் நான்கு கடவுளர்க்கும் ஒப்புக் காட்டிப் புகழ்வதால், இப்பாட்டு பூவை நிலைத் துறைக்குச் சிறந்த பாட்டு எனக் கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் உள்வரி 3உம் முறையே பாண்டியன், சோழன், சேரன் ஆகிய மூவேந்தரையும் தனித்தனியே திருமாலுக்கு ஒப்புக் கூறுதலால், அவையும் பூவை நிலையாம் என்பர்].

(9) ஆரமர் ஓட்டலும் = நிரை கவர்ந்த படை மறவரைக் கரந்தைப் பொருநர் வென்று புறம்கொடுத் தோடச் செய்தலும்;

ஈண்டும் உம்மை தொக்கது. இதில் ‘அமர்’ என்பது அமர் புரிபவருக்கு ஆகுபெயர்; ‘வட வாரியரொடு வண்டமிழ்மயக்கத்து’ எனும் காட்சிக் காதை யடியினும், ‘வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம், தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என’ என்னும் கால்கோட் காதையடியிலும், ‘தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானம்’ எனவரும் குடபுலவியனார் புறப்பாட்டடியிலும், ‘கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து’ எனும் கபிலரின் 7ஆம் பத்தின் 3ஆம் பாட்டு அடியிலும், ‘தமிழ்’