பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை183

என்பது தமிழ்ப் படைக்கு ஆகுபெயராய் நிற்பதுபோல, ஈண்டு அமரென்பது தானைப் பொருநரைச் சுட்டுதல் வெளிப்படை.

ஆரமர் ஓட்டல் எனப் பொதுப்பட நிற்றலால், நிரை கொண்டார் மீட்கவரும் மறவரை ஓட்டுதலும், மீட்பவர் நிரை கவர்ந்தவரை வென்றோட்டலு மாகிய இரண்டனையும் இத்தொடர் குறிக்குமெனப் பிறர் உரை கூறினர். நிரை கொள்ளும் வெட்சிமறவர் மீட்போரை வென்றழிக்கும் பரிசெல்லாம் முன் வெட்சிவகை ஆகோளின் துறைகளுள் அடங்கக் கூறுதலானும், அதை விலக்கிக் கரந்தை முதலிய பிறவகை வெட்சித் துறைகளே இதிற் கூறவேண்டுதலானும், இதையடுத்த துறை கவரப்பட்ட நிரையை மீட்டுத் தருதலாதலின் கொண்டோரை வென்றன்றி ஆபெயர்த்துத் தருதல் கூடாமையானும், ஈண்டு ‘ஆரமர் ஓட்டல்’ ஆகோள் மறவர் வென்றி குறியாது அவரை வென்றோட்டும் கரந்தைப் பொருநரையே குறிப்ப தொருதலை. அன்றியும், ‘ஆரமரோட்டல்’ முதல் ‘நெடுமொழி தன்னொடு புணர்த்தல்’ வரை குறிக்கப்படும் துறையனைத்தும் ‘அனைக்குரி மரபினது கரந்தை’ எனத் தெளிக்கப்படுதலானும் இது கரந்தைத் துறையே யாம்.

(10) ஆபெயர்த்துத் தருதலும் = பகைவர் கவர்ந்த நிரையைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டித் தருதலும்;

அமரோட்டலும் ஆபெயர்த்தலும் நிரைமீட்கும் கரந்தைப் பொருநர் வினையாதலானும், கவர்ந்த மறவரை வென்று ஓட்டினாலொழிய நிரை மீட்டல் கூடாமையானும், இவை யிரண்டும் காரண காரிய முறையில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிகழும் பெற்றியவாகும்.

“கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற்
 பல்லான் இ நிரை தழீஇய வில்லோர்க்
 கொடுஞ்சிறைக் குரூஉப்பருந் தார்ப்பத்
 தடிந்துமாறு பெயர்த்தஇக் கருங்கை வாளே. ”

எனவரும் ஒளவையார் புறப்பாட்டும்,

“. . . . . . . . . கன்றொடு
 கரவைதந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை”