பக்கம் எண் :

184நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

எனும் 264ஆம் புறப்பாட்டும், ஆரமரோட்டல் ஆபெயர்த்துத் தருதல் எனுமிரு துறைகளையும் ஒரு பரிசாய் ஒருங்கு கூறுதல் காண்க. ‘வளரத் துடியினும்’ எனும் வடமோதங் கிழார் புறப்பாட்டிலும் இவ்விரு துறைகளும் ஒருங்கு வருதல் அறிக.

(11) சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலும் = மீட்சி மறவர் தம்வேந்தர் பெருமையை மீக்கூறுதலும்;

இதுவும் கரந்தை வகையாதலால், மீட்போர் தம் வேந்தனை மீக்கூறுதலையே குறிப்பதாகும்.

“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்; பலரென்னை
 முன்னின்று கன்னின் றவர். ”

குறள்-771

“பறைநிறை கொல்யானை பஞ்சவர்க்குப் பாங்காய்
 முறைமுறையின் உய்யாதார் தேயம் - முறைமுறையின்
 ஆன்போய் அரிவையர்போய் ஆடவர்போய் யாயீன்ற
 ஈன்போய் உறையும் இடம். ”

- முத்தொள்ளாயிரத்திரட்டு செய். 9

இவ்விரண்டு பாட்டுக்களிலும், மறவர் தம்வேந்தன் சிறப்புக் கூறுதல் காண்க.

(12) தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் = தத்தம் தலைமைத்தாம் முயற்சியின் திறல் குறித்துத் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதலும்;

நெடுமொழி = தற்புகழ்ச்சி; தருக்கிய வஞ்சினமுமாம். ‘மடங்கலிற் சினைஇ’ எனும் பூதப்பாண்டியன் (71ஆம்) புறப்பாட்டும், ‘நகுதக்கனரே’ எனும் நெடுஞ்செழியன் (புறம். 72) பாட்டும், ‘மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி’ எனும் நலங்கிள்ளி (புறம். 73) பாட்டும், ஆக மூன்றிலும் வேந்தன் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதல் விளக்கப்படுகின்றது. இனி, ‘கந்துமுனிந் துயிர்க்கும்’ எனும் மூலங்கிழார் புறப்பாட்டில்,

“. . . . . . . . . . வேண்டார்
 எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில்
 கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய