292 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
. . . . . . . . . . . . . . அறந்துஞ்சுஞ் செங்கோ லையே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை” எனவருவது இத்துறை. இன்னும், “நெல்லுமுயிரன்றே” எனும் மோசிகீரனார் பாட்டும் (புறம். 186), “நாடா கொன்றோ?” எனும் ஒளவை புறப்பாட்டும் (187) இத்துறையே குறிப்பன. பொருள் : (8)வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் = வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, அவற்றுடன் ஒருங்கெண்ணப்பட்டு வரும் புறநிலை வாழ்த்து, எனும் “வாழ்த்தியல்” வகை மூன்றும்; கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் = (புரைதீர் செந்திறக்) கைக்கிளை வகையாய்ப் பாடாணாவனவோடுஞ் சேரக்கூட்டி, முன்னேழும்போற் றனிநிலையின்றி இனம்தொக்குவரும் தொகைப் பரிசாலொத்த இந் நான்கும்; உள என மொழிப = முன்னேழோடும் சேர்த்தெட்டாவது பாடாண் வகையாய் எண்ணுதற்குள்ளன என்பர் புறநூற்புலவர். குறிப்பு : இந் நூற்பாவில் வரும் உம்மைகள் எல்லாம் எண் குறிப்பன. செய்யிளியலில் “புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ எனத் திறநிலை மூன்றும்” சேர்த்தெண்ணப் பெறுவதையும், “கைக்கிளைச் செய்யுள், செவியறி, வாயுறை, புறநிலை, என்றிவை தொகுநிலை” என்றொரு பரிசாய்ச் சேர்ந்து வருவதையும் செய்யுளியலிற்கண்டு தெளிக. இந்நான்கும் ஒருங்கே தொகுநிலைகளாவதானும், ஒரு பரிசாய்ப் பாடாணாதற்குரியவையாதலானும், அவற்றை ஒருங்கே கூட்டி எட்டாவது வகையாயிதிலெண்ணப்பட்டது. இதற்குமாறா யிவற்றைப் பிரித்துத் தனித் தனியே நான்காக்கி, ஏத்தலையும் பழித்தலையும் ஒன்றாக்கி, “முன்கூறிய ஆறனோடே பத்தாய்ப் பாடாண் திணைக்குரிய துறைகள் உள” என்பர் நச்சினார்க்கினியர். பாடாண் துறைகள் இதற்கடுத்த நூற்பாவில் கூறப்பெறுவதாலும், மற்றப் புறத்திணைகளுக்குரிய துறைகளையெல்லாம் சேர்த்தொவ்வொரு நூற்பாவிலமைப்பதும், வெட்சி, உழிஞை போன்ற சில திணைகளின் சிறப்புவகைகளை மட்டும் வேறொரு சூத்திரமாக்குவதும் தொல்காப்பியர் கொண்டாளுமுறையாதலாலும், இதில் கூறுபவை பாடாண்திணையின் சிறப்பு |