294 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னுக பெருமநீ நிலமிசை யானே. ” - புறம். 6 (3) புறநிலை வாழ்த்துப் பாடாண் செய்யுள் : (அ) | “திங்க ளிளங்கதிர்போற் றென்றிங்க ளூர்த்தேவன் மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து - திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ” | | - பழைய பாட்டு |
(ஆ) | “இமையா முக்க ணிலங்குசுடர் பயந்த உமையொரு பாகத் தொருவன் காப்பநின் பல்கிளைச் சுற்றமொடு நல்லிதி னந்தி நீபல வாழிய, வாய்வாட் சென்னி!நின் னொருகுடை வரைப்பி னீழல் பெற்றுக் கிடந்த வெழுகட னாப்பண் அகலிரு விசும்பின் மீனினும் பலவே. ” | | - சூத். 422, நச். உரைமேற்கோள் |
(4) கைக்கிளைப் பாடாணுக்குச் செய்யுள் : (அ) | “இனத்தோ டினஞ்சேரு மென்னுஞ்சொ லுண்மை மனத்துறைக்க வைத்தாய் மடவோய் - பனைத்தோணின் கண்ணிருவேல் கண்டதுமென் கைவேல் கழலுமெனின் எண்ணுவதென் நீயருளா யேல்” |
(ஆ) | “நைவாரை நல்லார் நலிவரோ? நாளுமருள் செய்வார், சிரியார் சிறியார்போல்; தெய்வ எழிலோய்! தொழுதேற் கிரங்குவதுன் பண்பின் வழியால் மறவாயென் மாட்டு” |
இவ்வெண்பாக்களில், காமஞ்சாலா இளமையோள்வயிற் காதல்கொண்ட தலைவன் அவளிளமையு மழகும் பாராட்டுதலாலிவை பாடாணாதலறிக. |