பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை295

சூத்திரம் : 35 
 தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்,
சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்,
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும்,
மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும்,
மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும்,
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்,
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயிற் றோன்றும் இருவகை விடையும்,
அச்சமும் உவகையும் எச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

கருத்து : இது, பாடாண்துறை கூறுகிறது.

பொருள் : (1) கிடந்தோர்க்குத் தாவினல்லிசை கருதிய சூதரேத்திய துயிலெடை நிலையும் = துயிலும் புரவலர்க்குப் புரைபடா அவர் நல்ல புகழைக் கருதிக் கட்டியங் கூறுவோர் எடுத்துரைக்கும் துயிலெடை என்னும் பள்ளி எழுச்சியும்; அதற்குச் செய்யுள்:

“கானம் பொருந்திய கயவாய் மகளிரின்
 யானுறுந் துயரம் நந்திய பானாள்
 இமையாக் கண்ணோ டமையாக் காத்தநின்
 மூதில் முதல்வன் துயில்கொண் டாங்குப்
 போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ
 சேக்கை வளர்ந்தனை பெரும! தாக்கிய
 வண்கை யவுண னுயிர்செல வாங்கவ
 னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய
 வாடா வஞ்சி மலைந்த சென்னிப்