296 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
போரடு தானைப் பொலந்தேர் வளவ! நின்றுயி லெழுமதி நீயும் ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே” - நச். உரைமேற்கோள் (2) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் = கூத்தர் முதலிய நால்வகை இரவலரும்; [ கூத்தர், பிறரொப்புக் கருதாது, பேசாமல் பாடாமல் மெய்ப்பாட்டால் அவிநயித்தாடுபவர். பாணர் இசை பாடுவோர்; இவர்தம் பாட்டும் கையாளுமிசைக் கருவியுங்கருதி, இசைப்பாணர் - யாழ்ப்பாணர் - துடிப்பாணர்அதாவது மண்டைப்பாணர் எனப் பலதிறப்படுவர்; யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப்பாணர் அல்லது சிறுபாணர் - பேரியாழ்ப்பாணர் அல்லது பெரும்பாணர் என்றிருவகையினராவர். இனி, பொருநராவார் நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந் = ஒப்பு). விறலி, இசைக்கேற்ப ஆடுபவள் [ விறல் = உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டுந்திறன். அத்திறலுடையார் விறலியர் ] ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றிப் பெற்றபெருவளம் பெறாஅர்க்கறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் = (பரிசில் பெற்று மீளுமொருவன் தன்னெதிரே பரிசில் விரும்பித் தரும்புரவலரைத் தேடிவரும் இரவலனுக்கு) வழியிடையில் தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றவனுக்குத் தெரிவித்துத், தனக்களித்த புரவலன்பாற் சென்றுபெறச்சொல்லும் பகுதியும்; இதில், கூத்தராற்றுப்படைக்கு மலைபடுகடாமும், பாணாற்றுப்படைக்குச் சிறுபாண் - பெரும்பாண்பாட்டுக்களும், பொருநராற்றுப்படைக்கு முடத்தாமக்கண்ணியார் கரிகாலனைப் பாடிய பொருநராற்றுப்படைச்செய்யுளும், விறலியாற்றுப்படைக்குப் புறநானூற்று 105, 33ஆம் பாட்டுக்களும் எடுத்துக்காட்டாகும். (அ) கூத்தராற்றுப்படைக்குச் செய்யுள் : “வான்தோய் வெண்குடை வயமா வளவன் ஈன்றோர் தம்மினும் தோன்ற நல்கினன்; சுரஞ்செல் வருத்தமொ டிரங்கி யென்றும் இரற்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன்; |