தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 297 |
சென்மதி, வாழிய நீயே; நின்வயின் ஆடலு மகிழான், பாடலுங் கேளான், வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ னல்லன், நல்லிசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு, திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே” - நச். உரைமேற்கோள் (ஆ) பாணராற்றுப்படைக்குச் செய்யுள் : “வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண! கேளினி நயத்திற் பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்கு இலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின் மலர்ந்தே” - புறம். 155 (இ) பொருநராற்றுப்படைக்குச் செய்யுள்: “அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் சோறு நசையுறாது வேறுபுல முன்னிய விரகறி பொருந! . . . . . . . . . . . . . . . . . . கோடியர் தலைவ! கொண்ட தறிந! . . . . . . . . . . . . . . . . போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந! வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு நீடுபசி யொராஅல் வேண்டி னீடின் றெழுமதி, வாழி, ஏழின் கிழவ! பழுமர முள்ளிய பறவையின் யானுமவன் இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்கென் னிடும்பை தீர . . . . . . . . . . . . . . . . . . தன்னறி யளவையிற் றரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீர வந்தனென்; வென்வேல் |