பக்கம் எண் :

298நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்
கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி லணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்கு விராயின்,
. . . . . . . . . . . . . . . .
நன்பல் லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவருஞ் செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே. ”

- பொருநராற்றுப்படை

(ஈ)  இனி, விறலியாற்றுப்படைக்குச் செய்யுள் :

“சேயிழை பெறுகுவை, வாணுதல் விறலி!
 தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
 வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
 பெய்யினும் பெய்யா தாயினு மருவி
 கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
 மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
 நீரினு மினிய சாயற்
 பாரி வேள்பாற் பாடினிர் செலினே”

- புறம். 105

(3)  சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும் = பிறந்த வெள்ளணி நன்னாளில் சினமகற்றிச் சிறந்த பெருநாள்விழவயரும் பெருமங்கலம் என்னும் வெள்ளணி விழாவும்;

 [ பெருமங்கலம் = வெள்ளணி என்னும் பிறந்தநாள் விழா. அந்நாளில் வெள்ளையணிதலால், அஃதப்பெயர் பெற்றது. இகழும் பகைவரைக் கறுத்தலும் தவறு செய்தாரை ஒறுத்தலும் வெள்ளணி விழவொடு கொள்ளாத சினமாதலின் அவற்றை விலக்கிச், சிறைவீடு கொடை முதலிய சிறந்தன செய்வதே முறையாத லிதிற் சுட்டப் படுந் துறையாகும் ].

அதற்குச் செய்யுள் :

(அ)“செய்கை யரிய களவழிப்பா முன்செய்த
 பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய