பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை299

மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக்
கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம்”

- நச். உரைமேற்கோள்

(ஆ)“பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
 சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு”
 - மதுரைக்காஞ்சி, வரி : 618 - 619

(4)  சிறந்த கீர்த்தி மண்ணு மங்கலமும் = முடிபுனைந்த விழவின் நீராட்டு மங்கலமும்;

 [வடநூல்களிலும் இது “பட்டாபிசேக உத்சவம்” எனப்பாராட்டப்படுகிறது] 

இதற்குச் செய்யுள்

“மணிமுடி தான்சூடி வழுதியர்தென் கூடல்
அணியா தனமிவர்ந்த வன்னாள் - பணியணியான்
தாணினைந்து நீராடித் தாள்பணிவார் தார்மன்னர்,
வேணவெலா மீந்துவக்கும் வேந்து”

(5)  நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும் = உலகிய லொழுக்குயர்த்தும் புகழ்பெற்ற வேந்தனது குளிர்ந்த குடைநிழல் முறைமையும்;

அதற்குச் செய்யுள் :

(அ)“அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானைப்
 புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா
 மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக்
 கோவேந்தன் மாறன் குடை”
(ஆ). . . . . . . . . . . . . . . . .
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும!
. . . . . . . . . . . . . . . . .
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை