பக்கம் எண் :

300நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ!

- புறம். 35, வரி ; 4 - 21

(6)  மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் = பகைவர்பால் கொற்றங் கருதி கொண்டாடும் வாள்நீராட்டு மங்கல விழாவும்;

அதற்குச் செய்யுள் :

“பார்தாங்குந் தண்குடையான் பாண்டியன்வாள் பற்றலரின்
 தார்தாங்கு மார்பிளக்கத் தாக்கியசெந் - நீர்முடையை
 நீராட்டி நீக்கிநறு நெய்யணிநன் னாள்விழவைப்
 பாராட்டு மாறன் படை”

(7)  மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் = நீண்டு நிலைத்த பகையரணெறிந்து பாழ்செய்து நீராடும் மற விழவும்;

அதற்குச் செய்யுள் :

(அ) “கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
 வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
 பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்”
 - புறம். 15
(ஆ)“. . . . . . . . . . . . . செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொள் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள்
உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப்போர் வேட்டு,
வேறுபல் பூளையொ டுழிஞை சூடி
. . . . . . . . . . . . . . . . . .
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை யெகுப்பி,
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்