தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 303 |
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே; அன்னதோர் தேற்றா ஈகையு முளதுகொல்? போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. ” - புறம். 140 (10) அச்சமும் உவகையும் எச்சமின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட = நன்னாளும் நல்லகுறி (வாய்ப்புள்) நற்சொல் (விரிச்சி) முதலிய மற்றைய வாய்ப்புக்களும் கொண்டு, தலைவனுக்கு நேரும் தீமைக்கச்சமும் நன்மைக்கு மகிழ்வும் கூர்ந்து கவனக்குறைவின்றி ஆய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக்கூறும் வாழ்த்தடங்க; இதற்குச் செய்யுள்: “காலனும் காலம் பார்க்கும், பாராது வேலீண்டி தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே! திசையிரு நான்கும் உற்கமுற்கவும், பெருமரத் திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும், வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும், எயிறு நிலத்து வீழவும், எண்ணெயாடவும், களிறுமேற் கொள்ளவும், காழக நீப்பவும், வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், கனவி னரியன காணா நனவிற் செருச்செய் முன்ப!நின் வருதிற னோக்கி மையல் கொண்ட ஏமமி லிருக்கையர் புதல்வர்ப் பூங்கண் முத்தி மனையோட் கெவ்வங் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றால் தானே, காற்றோ டெரிநிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ!நிற் சினைஇயோர் நாடே. ” - புறம். 41 |