மெய்ப்பாட்டியற் சூத்திரங்கள் சூத்திரம் : 1 | | | பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. |
கருத்து : இஃது, இயற்றமிழ்ச் செய்யுளுள் யாண்டும் பயிலும் பொதுமெய்ப்பாடுகளின் தொகையும், அவை வகைப்படுமாறும் கூறுகிறது. பொருள் : பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் = தனிநிலை கருதாமல் ஒருபுறக்குறியால் புலப்படும் இனத்தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உணர்வுகள் முப்பத்திரண்டும்; கண்ணியபுறனே நானான்கென்ப = பொருந்தப் புலப்படும் மெய்ப்புறக்குறியால் நாலுநாலாய்த் தொகுத்து எண்ணப்படும் என்பர் புலவர். குறிப்பு : பொருளும் என்பதன் உம்மை, இனைத்தென அறிதலின், முற்றுமை. பண்ணை என்பது தொகுதி. இஃது இப்பொருட்டாதல் “ஒலித்தன முரசின் பண்ணை” என்னும் கம்பரின் (மகரக்கண்ணன் வதை) செய்யுளடியாற் றெளிக; பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும், சுற்றம் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒரு கழகமும் தொகுதிபற்றிப் பண்ணை யெனப்படுதலானுமறிக. இனி, எண்ணான்கு என்றது, ஒத்த குறியியல் கருதித் தொகுத்தினம்புணர்க்காமல், தனித்தனி எண்ணவரும் மெய்ப்பாட்டுப் பொருளா முள்ளுணர்வுகளின் தொகையெண்; நானான்கென்றது அவை முப்பத்திரண்டையும் மெய்ப்படுகுறியொப்புமையால் நிரலே நந்நாலாக இனம்புணர்த்தெண்ணும் |