தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 369 |
. . . . . . . . . . . . . . . . . ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே” (குறுந். 181) ‘தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற்காக்கும் சோர்வின்மையே’ திண்ணிய கற்பின் பெண்மையறமெனவுணர்ந் தொழுகுபவளே பெண்ணெனக் கூறப்படுதலானு மிவ்வுண்மையறிக. ‘இல்லது காய்தல்’ கணவன்பால் இல்லாதவற்றை ஏறட்டு வெகுளுவது. “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று” (குறள். 1313) ‘உள்ளது உவர்த்தல்’ : இது தலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல். “. . . . . . . . . . . . . . . . . . . இன்று வந்து, ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாய்ப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை எள்ளல்அஃ தமைகுந் தில்ல . . . . . . . . . . . . . . . இளமை சென்று தவத்தொல் லஃதே இனிஎவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே” (அகம். 6) எனும் பரணர் பாட்டு, பிரிந்து வந்த தலைவன் தன் ஆற்றாமையால் பரிந்து தலைவியைத் தழுவிப் பாராட்டவும், அவள் அதைப் பொய்யென வெறுப்பது குறிப்பதால், அது உள்ளது உவர்த்தலாகும். ‘புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப் பாக்கம்’ என்பது மணந்துவாழ்வார் கற்புக்காதற்கு இடையுறு காலத்தடை கருதாதொழுகுதலாம். “காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்” (குறுந். 32) |