தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 371 |
புகழு முன்னர் நாணுப பழியாங் கொல்பவோ காணுங் காலே” (குறுந். 252) எனும் பாட்டில், பழிக்குரிய தலைவன் தவறுரைப்பதும் இழுக்கென வெறுக்கும் தலைவியினருள் நயத்தற்குரியது. மனைத்தக்க மாண்புடைய மனைவி இயல்பு, தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் எனும் வள்ளுவர் கொள்கையு மிவ்வுண்மையை வலியுறுத்தும். ‘அன்புதொகநிற்ற’லாவது கொழுநன்கொடுமை உளங்கொளாமல், அவன்பாற் காதல் குறையாதொழுகல். “. . . . . . . . . காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே” (குறுந். 60) “. . . . . . . . . . . . . பெருங்கல் நாடன் இனிய னாகலின் இனத்தின் இயன்ற இன்னா மையினு மினிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே” (குறுந். 288) “நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும் வாடன் மறந்தன தோள்” (ஐந்திணை எழு. 2) என்பனவுமது. ‘பிரிவாற்றாமை’ - களவிற்போலக் கற்பிற் றலைவி காதலை மறைத்தல் வேண்டாமையின் தலைவன் பிரிவைத் தாங்கா தழுங்குதல். “ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே” (நற். 284) “ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னாற் றோழி! . . . . . . . . . . . . . . வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய |