தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 373 |
உடன்வாழ்ந்து ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால் காமஞ் சான்ற கற்புச் சிறந்தது. அச்சிறந்த வாழ்வு முன் கழிந்த களவின் பயனாமெனக் கற்பிய லிறுதியில் தெளிக்கப்பட்டிருந்தலால், அன்புத்திணையிற் சிறந்தது கற்புக் காதல், அதற்குச் சிறந்தன இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு பத்தும், எனும் அமைவு தோன்ற, இப்பத்து மெய்ப்பாடுகளையும் ‘சிறந்த பத்தும் செப்பிய பொருளே’ எனக்கூறிய பெற்றியும் தேறற்பாலது. சூத்திரம் : 25 | | | பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. |
கருத்து : இது, தலையாய காதல் நிலையாவதற்குக் காதலரிருபாலார்க்கும் வேண்டப்படும் ஒப்புவகை கூறுகின்றது. பொருள் : பிறப்பு = தோன்றிய குடிநிலை; குடிமை = ஒழுக்கநிலை; “ஒழுக்க முடைமை குடிமை” என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இதில் குடிமை ஒழுக்கம் குறிக்கும். ஆண்மை = ஆளுந்திறம். இது காதலர்க்கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலவர்க்கும் பொதுவாதல் தேற்றம். மனையாட்டி, இயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும். ஆண்டு = பருவம்; அதாவது வயது; உருவு = வடிவம்; அதாவது “மூப்போ டிளமை முரணா” வனப்பு. நிறுத்த காம வாயில் = நிலைத்த காதல்நிலை; நிறை = அடக்கம்; அருள் = பிறர் வருத்தம்பொறாப் பரிவுடைமை; உணர்வு = அறிவு; உணர்ச்சி எனினும் அமையும்; திரு = செல்வம்; இது பொருள் பற்றியதன்று; உள்ள மலர்ச்சி. “செல்வ மென்பது சிந்தையினிறைவே” என்பதனாலும் இப்பொருட்டாதலறிக. என முறையுக் கிளந்த ஒப்பினது வகை = என்று நிரலே கூறிய பத்தும் காதலர்க் கின்றியமையா ஒப்பின் வகையவாம். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள். முன் களவியலில், “ஒன்றே வேறே என்றிருபால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” எனும் சூத்திரத்தில், தலைக் காட்சியில் முளைத்த காதல் நிலைத்து |