374 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும். ஆண்டுக் கூறாமையால், ஒத்த காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியவாதலின், அக்காதல்நிலைக்குரியதென முன் தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது. இவைதாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையால் தெளியப்படும். சூத்திரம் : 26 | | | நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் பலவர். |
கருத்து : இஃது இவ்வியலிற் கூறிய மெய்ப்பாடுகள் தோன்றுதற்குரிய காதலுக்காகாத குற்றங்களைக் கூறுகின்றது. பொருள் : நிம்பிரி = பிறைபொறாப் பெற்றி; அதாவது சகிப்பின்மை. இஃதழுக்காறன்று. அழுக்காறு தனித்தார்மாட்டும் தவறாமாதலானும், இங்குக் காதலர் வாழ்வுக் காகாதன கூறுவதே கருத்தாதலானும், ‘குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை’ யாமாதலானும், இற்கிழத்திக்கு இன்றியமையா மடன் என்பது தலைவன் குற்றம் தானறியாமை யாதலானும், தலைவனைக் காணாக்கால் அவன் தவறல்லன காணாத் தலைவி, அவனைக் காணுங்கால் தவறாய காணாள் என இல்லாளியல் சொல்லப் பெறுதலானும், ஈண்டு ‘நிம்பிரி’ அழுக்காறு என்னும் பொறாமை சுட்டாது, பிழைபொறாப் பெற்றியையே குறிப்பது தெளிவு. அஃதுளதாயின் காதல் வாழ்வுக்கு ஏதமாதலின் விலக்காயிற்று. கொடுமை = அறனழிய நெறிபிறழுமியல்பு. வியப்பு = மருட்கை; இதை அற்புதம் என்பர் வடநூலுடையார். இது ஒத்த காதலுக்கு ஒல்லாக் குற்றமாகும். மருட்கை மதிமை சாலாதாதலானும், அஃதுள்வழித் தலையாய காதல் |