பக்கம் எண் :

376நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இழுக்கென விலக்கப்பட்டது. தலைவிக்கு உயர்குடியுவகை விலக்கியதோ டமையாது, தன்பணிவு மறவாது தலைவனுயர்வுள்ளலு மின்றியமையாதென வற்புறுத்துங் குறிப்பால், குடிமை யின்புறல் கூடாதென்பதனோடு ஏழைமை மறப்பும் விதந்து விலக்கப்பட்டது.

இனி, ஒப்புமையாவது, தனைவனைப் பிறரொடு ஒப்ப நினைப்பது; அந்நினைவும் கற்பறமழிக்கும் இழுக்காமாதலிற் கடியப்பட்டது. முன் எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் வேண்டப்பட்டதெனின், அது மலர் மதிபோன்ற பொருள்களை அவற்றிற்கேற்கும் தலைவன் உறுப்போ டொப்புமைகோடலே குறித்தலின், அது குற்றமற்ற காதற்குறிப்பு எனக்கொள்ளப்பட்டது. இங்குப் பிறரொடு தலைவனின் ஒப்பு நினைப்பது பெண்மைக்கேலாப் பிழையாதலின், அது கடியப்பட்டது. என்றிவையின்மை = எனக் குறித்த குற்றங்கள் இல்லாமை (காதலர்க்கு வேண்டும்) என்மனார் புலவர் = என்று கூறுவர் புலவர்.

குறிப்பு : இதில் “ஒடு”க்கள் எண் குறிப்பன. குடிமையின்புறலை இளம்பூரணர் ஒரு தொடராகவே கொண்டு, ஏழைமைமறப்பை இரண்டாக்கிக் குற்றம் பதினொன்று எனக் கொள்வர். பேராசிரியர் குடிமையும், இன்புறலும் என வெவ்வேறு பிரித்துப் பன்னிருகுற்றம் எண்ணிக் காட்டுவர். குடிமை காதலர்க்கு வேண்டப்படும் ஒப்புவகையுள் ஒன்றெனவும், (மெய்ப். சூ. 25) இன்புறல் உண்மைக்காதற் குறிப்பென்றெண்ணப்படும் மெய்ப்பாடுகளுள் ஒன்றெனவும் (மெய்ப். சூ. 12) இவ்வியல் முன் சூத்திரங்களிற் குறிப்பதனால் அவற்றைக் காதற் கொல்லாக் குற்றமென் றிங்குத் தொல்காப்பியனார் கடிந்தாரெனக் கோடல் முன்னொடு பின் முரணுவதால் எனைத்தானும் எண்ணற்பாற்றன்று. ஆதலின், குடிமையின்புறலை ஒரேதொடராக் கொண்டு பிறப்பின் பெருமிதம் தலைவிக்கேலாத் தவறெனக் கூறுவதே கருத்தாதல் தேற்றம். அதுவே போல் மறப்பை ஏழைமையின் வேறாகப் பிரித்தலும் பொருந்தாது. மேலே பொச்சாப்பு மெய்க்காதற் குறிகளுள் ஒன்றெனக் கூறப்படுதலின், அதனையே மறப்பெனச் சொன்மாற்றிக் காதற்கேலாக் குற்றமெனக் குறிப்பதாய்க் கருதற்கில்லை. அன்றியும், ஏழைமையுணர்வு நன்றாவதன்றிக் காதல்வாழ்விற் கடிவரையின்று. ஆதலின், அவ்விரண்டையும் ஒருங்கெண்ணி, ஏழைமை மறப்பைக் குற்றமாக் கொள்வதே ஒருதலை. இன்னும் மேலிரு சூத்திரமும் பத்தே