பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை383

உடனிருந்து பேணி இன்பம் நுகர்வித்தாற்றும் தன் ஆண்மையறத்தை நினைப்பதும் நினைத்து மீள்வதும் கூடுமென்னும் குறிப்புடைமையா லிஃதிறைச்சியாதல் காண்க.

(ii)  உள்ளுறை உவமமாவது, ஒப்பும் பொருளும் ஒருங்கு புலப்பட வரும் ஏனை உவமம் அல்லது செவ்வொப்பணி போலாது, கூறப்படும் கருப்பொருட் செய்தியினகத்தடங்கி, அச்செய்தியே ஒப்பாய், அது விளக்கும் பொருள் கூறாக்குறிப்பாய் உய்த்துணர்வோரால் மட்டும் அறிய நிற்பது.

உள்ளுறை உவமம், அகத்திணை இயலில்,

(1) “உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே”
 (அகத். சூ. 50)
(2) “உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை யுவமம்”
 (அகத். சூ. 51)

எனும் சூத்திரங்களால் தெளிக்கப்பட்டது.

உள்ளுறை உவமம் வருமாறு:

“கொடிப்பூ வேழம் தீண்டி அயல
 வடுக்கொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும்
 மணித்துறை யூரன் மார்பே
 பனித்துயில் செய்யு மின்சா யற்றை”

(ஐங். 14)

இதில், கொடிப்பூவேழம் பரத்தையாகவும், மாதலைவியாகவும், வேழம் தீண்டி வடுப்படு மாவின் வண்டளிர் நுடங்கல் பரத்தைநலிய வருந்துந் தலைவியின் மெலிவாகவும் (தெய்வமொழிந்த) மருதநிலக் கருப்பொருள்களை நிலனாக்கி அவற்றால் ஒப்புப் பொருளை உள்ளுறுத் தமைத்தலால், இஃதுள்ளுறையுவமமாகும்.

(iii)  சுட்டு என்பது ஒரு கூற்றின் வெளிப்படையான சொற்பொருளன்றி அக்கூற்றின் உள்ளுறையாகப் பிறிதொன்றைக் குறிப்பால் உணர்த்துவதாகும். கருதிய பொருளைக் கூற்றின் சொற்றுணைகொண்டே சுட்டுவதும், சொற்பொருளின் புறத்தே குறிப்பாலுணரச் சுட்டுவதும் எனச் சுட்டு இருவகைத்தாம். இவை