பக்கம் எண் :

384நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

முறையே ‘சொல்லொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவி’, (1) குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவி (2) என வகுத்துக் கூறப்பட்டன.

(1)   இவற்றுள் முன்னது கூற்றின் சொற்றுணை கொண்டே செய்யுளிற் புலவன் உட்குறிப்பை உணர்த்துவதாகும்.

“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும், தோன்றுவது கிளந்த துணிவினானும்” என்றிருவகைத்தாம் பிசி நிலைகளும் “சொல்லொடு முடிவுகொளியற்கையவாம்” சுட்டிலடங்கும். ‘பிறை கௌவி மலை நடக்கும்’ என்னும் ஒப்பொடு புணர்ந்த உவமம், அக்கூற்றின் சொற்றுணையானே யானையைச் சுட்டுவதாயிற்று. இனி,

“நீராடான் பார்ப்பான், நிறஞ்செய்யான்,
 நீராடின் ஊராடும் நீரிற்காக்கை”

என்பதில், ஒப்பின்றிக் “கூறுவோன் உள்ளத்தில் தோன்றுவது கிளந்த துணிவுறு” கூற்றும் அதன் சொல்லாற்றலாலேயே நெருப்பைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு இவ்விருதிறப் பிசிநிலை வகையும் ‘சொல்லொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவி’ யாதல் கண்கூடு. உற்றுநோக்கின், உள்ளுறை உவமமும் ‘சொல்லொடு முடிவுகொளியற்கை புல்லிய உள்ளுறை’யேயாம். உள்ளுறை யுவமம் யாண்டும் கருப்பொருள் பற்றியேவரும்; சுட்டுக் கவ்வரையறையில்லை.

(2)   இனி, “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியாகும்” (செ. சூ. 172) என விளக்கப் பெற்றவை ‘குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய’ சுட்டு வகையாகும். ‘கற்கறிக்க நன்கட்டாய்’ என்பது போல்வன இவ்வகைச் சுட்டாகும். உறந்தையைப் ‘பறவாக் கோழி’ என்பதும், சேரர் பேரூரைப் ‘பூவா வஞ்சி’ என்பதும் போல்வன இதன்பாற்படும். இவையேபோல் இறைச்சி வகையும் ஓரளவு “குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய” உள்ளுறையாகும். இவற்றிடை வேற்றுமை பின்னர்க் காட்டுதும்.

(iv) சிறப்பென்பது, “புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்றாகி” வெளிப்பட விரியாது (124), கூற்றானன்றிக் குறிப்பால் உணர்த்தும் ‘புகழொடு புணர்ந்த அங்கதச்’ செய்யுளும்,