தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 385 |
அன்ன பிறவுமாகும். இது அங்கதத்தின் ஒருவகையாய்ப் “புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்றாயிற் செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்” (செ. சூ. 124) எனும் சூத்திரத்தால் தெளிக்கப்பெற்றது. சிறப்புக்குச் செய்யுள்: “பாரி பாரி என்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே” (புறம். 107) இது பழிப்பது போலப் புகழ்வதால், சிறப்பென்னு முள்ளுறையாயிற்று. (v) ‘நகை’ என்பது பழிசுரக்கு மெழிகரந்து, வசையொடு வரும் அங்கதச் செய்யுளும், அது போல்வன பிறவுமாகும். இது செய்யுளியலில் விளக்கப்பட்டுள்ளது. “வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்” (செய். சூ. 129) “மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும்” (செய். சூ. 126) பட்டாங்குக் கரவாவசைகூறும் செம்பொருளங்கதம் உள்ளுறையாகாமை வெளிப்படை. நகை என்னு முள்ளுறைக்குச் செய்யுள்: “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ . . . . . . . . . . . . . . . அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே. ” (புறம். 95) (குற்றில = குறிய குடிசை யுற்றுள). |