பக்கம் எண் :

392நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

 III. [ii] [1]  இனி, “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழி என்ப” என விளக்கப்பெற்ற “சுட்டு”என்னும் உள்ளுறையும் இரு வகைத்தாம். (1) ஒன்று, உள்ளுறை உவமம் போல, ஒப்பொடு புணர்ந்த உவமத்தாய் வரும் பிசி போல்வன “சொல்லொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி” மேற்றாம்; (2) மற்றொன்று, இறைச்சி போலத் “தோன்றுவது கிளந்த துணிவினால் வரும் பிசி” போல்வனவும், “கூற்றிடை வைத்த குறிப்பாம்” அங்கதம் போல்வனவும், “குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி” மேற்றாம்.

 III. [ii] [2] சுட்டுக்கும், இறைச்சி உள்ளுறையுவமங்கட்குமுள்ள வேற்றுமையாதெனின், (அ) உள்ளுறை உவமமும் இறைச்சியும் ‘எழுநிலத் தெழுந்த செய்யுள் வகையில்’ பெருவழக்காய் அடிவரை கொள்ளும் பாட்டிற் பயில்வது. குறிப்பாய் வரும் சுட்டு அவ்வாறன்றி உரை பிசி அங்கதம் முதலியவற்றிலும் வருவதாம்.

(ஆ)  உள்ளுறையுவமம் கருப்பொருள் பற்றியே வரும்; சுட்டுக்கது வேண்டுவதன்று.

(இ) இறைச்சியும் உள்ளுறை உவமமும் புறத்துறையில் விலக்கில்லை எனினும், அகத்துறைகளுக்கே சிறப்புரிமை கொண்டு வழங்கும்; சுட்டு, புறத்தும் அகத்தும் ஓராங்கு ஒத்தியலும்.

தொல்காப்பியர்
பொருட்படலப் புத்துரை

(4) களவியல், கற்பியல், செய்யுளியல்கள்

(நூற்பாக்கள் சிலவற்றின் விளக்கம்)