பக்கம் எண் :

394நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அல்லது ‘களவு’; உலகறியக் காதலர் மணந்து கணவனுமனைவியுமாய்க் கூடிவாழ்தல், ‘கற்பு’ அல்லது ‘மனையறம்’ எனப்படும். இவ்விரண்டனுள் களவுக் காதலொழுக்கம் இவ்வோத்தில் விரிக்கப் பெறுதலால், இது களவியலெனப்பட்டது.

இதில், முதற்சூத்திரம் களவொழுக்க விளக்கம். தலைமக்களின் முதலெதிர்ப்பாடான காட்சி. 2ஆவது சூத்திரத்தும், எதிர்ப்பட்ட தலைமக்கள் தம்முள் ஒருவரை யொருவர் முன்னறியாமையால், ‘யாரோ’ எனக் கடுக்கும் ஐயம். 3ஆவதிலும், ஐயமகலத் தேர்ந்து தெளிதல். 4ஆவதிலும், அவ்வாறு தெளிந்தாருளக் குறிப்பை விழி வாய்மொழியால் இருவரு மயர்வற உணர்தல். 5ஆவது 6ஆவது நூற்பாக்களிலும் அவையே கூறப்படுகின்றன. அடுத்த 7-8 சூத்திரங்கள், முறையே ஆண்மை-பெண்மைகளின் சிறப்பியல்பு. அதாவது இருபாலோ ருளப்பான்மைகளைக் குறிக்கின்றன. அப் பாற் சிறப்பியல்கள். அவர் காதலொழுக்க முறையின் நிறை உரைகளைத் தெளிப்பவையாதலின், அவ்வொழுக்கத் துறைகளை உய்த்துணரும் பொருட்டு அவற்றுக்கு முன் சுட்டப்படுகின்றன. 9முதல் களவொழுக்கம் விரிக்கப்படும். தம்முள் ஒத்த காதலுண்மையை உணர்ந்த இருவரும், தத்தமியல்பாலதை மறைத்தொழுகும் முயற்சியில் அடையும் நிலை வேறுபாடுகளை 9ஆவது நூற்பா தொகுக்கும். அந்நிலையில், அவரிடை நிகழும் செய்திகளிற் சிறந்த சிலவற்றை 10ஆவது சூத்திரம் பகரும். 11 முதல் 16 வரையுள்ள நூற்பாக்கள், களவிற் றலைவன் கூற்றிடம் கூறும். 17 முதல் 19 வரை, தலைவியின் கிளவி யருமையும், 20-21 அவள் கூற்று நிகழ்தற்கேற்ற இடமும் குறிக்கும். 22-தலைவிக்கும்23-தோழிக்கும், 24-செவிலிக்கும், 25-பெற்ற நற்றாய்க்கும், 26-அவ்விரு தாயர்க்கும், முறையே கூற்று நிகழுமிடங்களைக் கூறும். 27-பெண்ணீர்மையாற் பிறங்கும் தலைவி காதலியல் வேறுபாடு சுட்டும். 28ஆம் சூத்திரம், தலைமக்கள் பாங்காற்றுணையின்றித் தாங்களே காதற்றூதராய்ச் சென்று கூடுதலுண்டெனக்கூறும். இனி, களவு கூட்டக் களஞ்சுட்டு முரிமை தலைவியதென்று 29லும், ஒரோவழி தோழியுங் களங்குறிப்பாளென 30லும் கூறப்படுகின்றன. 31-களவிடைக் காதலர் அளவா நாட்களும், 32-தலைவி உற்றார்க்குரைத்துத் தன்மறை மணமுடிப்பார்த்தேர்ந்து அறத்தொடு நிற்கும் தகவும் சுட்டும். அவ்வாறவள் தேறிக் கூறற்குரிய இருவருள், செவிலியின் சிறப்பு 33லும், தோழியுரிமை 34-35லும் விளக்கப்படும். தலைவி களவைத், தோழி தேரும் மூவகை முறையும் 36லும், அப்படித்தேர்ந்து