தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 401 |
இனி, கற்பற வாழ்வுக்குக் களவியற்காதல் இன்றியமையாததென்பது தமிழ்ச்சான்றோர் கண்டஉண்மை. இவ்வுண்மை “கற்பெனப்படுவது களவின் வழித்தே” என்றும் “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது (மனையறம்) பயிற்றல் இறந்ததன் (கழிந்த களவுக் காதலின்) பயனே” என்றும் நூல்களில் வற்புறுத்தப்படுதலா னறியப்படும். இருவயினொத்த உழுவலன்புண்மை, முன்னறியா இருவர் தாமே தமியராய்த் தலைப்பட்டுக் கண்டாங்கே உணர்வோடுயிரொன்றி ஒருமனப்பட்டு ஒருவரை ஒருவரின்றியமையாமல் இருவரும் உளம் புணரும் களவுக்காதல் அறவொழுக்கால் தேறப்படும் முன்னறிவும் பிறதுணையும் கூட்டக்கண்டிருவர் காதல் கூர்தல், பிற குறிக்கோள் கொண்டுளதாமாதலின், குறிப்பின்றி உள்ளுறையும் உழுவலன்பே அவர் காதற் காரணமாய்த் துணிதற்கில்லை. நாளும் பல பெண்டிரைக் கண்டுவரும் ஒருவனுக்கும், அவ்வாறே நாடோறும் ஆடவரைக் காணும் ஒருத்திக்கும் காணப்பட்டார்மாட்டெல்லாம் அவரின்றித் தானமையாக் காதல்வேட்கை பிறப்பதில்லை. பதவி, பணம், புகழ்மை, இளமை, அழகு முதலிய பயனோக்காற் பிறக்கும் வேட்கை. உளத்துறையு முழுவலன்பாகாமையின், அறநெறியினிலையாது. முன்னறிந்து தலைப்படுவாருள்ளத்துப் பிற குறிக்கோளுருவெடுத்து நிலையாத வேட்கையினுக் கிடந்தரலாம். அதுகொண்டே, முன்னறியார் தமியராய்த் தலைப்பட்டுக் கண்டாங்கே காதலினால் உயிரொன்றி உளங்கலத்தல் களவொழுக்கத் துவக்கமென நூல்கள்கூறும். இங்குத் தொல்காப்பியர் வலியுறுத்துமிக்கருத்து, இறையனார் களவியல் 2ஆம் சூத்திரத்தில் “தானே, அவளே, தமியர் காணக் காமப்புணர்ச்சி இருவயினொத்தல்” எனக் கூறுதலானுமினிதுவிளங்கும். இதில் காமப் புணர்ச்சி என்றது காதற்கூட்டத்தை. காமச்சொல் காதல் குறிப்பது முன் முதற் சூத்திர உரைக் குறிப்பால் தெளிக. “இருவயினொத்தல், ” களவிலும், பின் மணந்துவாழுங் கற்பிலும், மாறாமல் குறையாமல் இருவருக்கும் ஒருபடித்தாய் நிலையும் ஒத்த காதலுணர்வாம். தலைமக்கள் முதற் காட்சியில் தமியராய் எதிர்ப்பட்டுக் காதலால் உளங் கலத்தற்குச் செய்யுள்: “யாரு மில்லைத்; தானே கள்வன்; தானது பொய்ப்பின், யான்எவன் செய்கோ? தினைத்தா ளன்ன சிறுபசுங் கால |