பக்கம் எண் :

402நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே”

(குறுந். 25)

இக் குறுந்தொகைப் பாட்டில், மணவாமல் ஒருவழித்தணந் தொழுகும் தலைவனும் தானும் தமியராய் முன்னே முதனாட்காட்சியிற் காதலாலுயிரொன்றிக் கலந்த உள்ளப்புணர்ச்சியை ஒருவருமறியாமை நினைந்து, அவன் கொடுமைக்கினைந்து தலைவி தோழிக்குப் புனைந்து கூறுவதைக் கபிலர் குறிப்பதறிக.

இனி, “மிக்கோனாயினும் கடிவரையின்றே” என்றதன் குறிப்பறிவாம். ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காதலாலொன்றிக் காண்பர்’ என்று, பண்பொப்பு பால் விளியாலொன்றுதற் கின்றியமையாததெனக் குறித்ததனால், செவ்வொப்பமையாமற் சிறிது துயர்வு ஒருபால் நேருமிடத்தெல்லாம், களவொழுக்கம் கடியப்படும் என்றெண்ணக்கூடும். அதைவிலக்கி, உயர்வுளதேல், அது கிழவன்பாலாயிற் கேடு பெரிதில்லை என்றிப்புறநடையால் ஓரளவு தானுடன்பட்டமைக்கின்றார். உலகியலில் ஒப்பருமை உளதாக. அதைக்கடிதல் கூடாமையால் யாண்டும் யாவர்க்கும் காதலற வாழ்வுக்குச் செவ்வொப்பே சாலச்சிறந்தது. மிகுதி ( = உயர்வு) யார்மாட்டும் நன்றன்று. ஒரோவழி இருவருள் ஒருவர் சிறிது சிறந்துயருமிடத்து. அச் சிறப்புத் தலைவி மாட்டுளதாமேல், தலைவனிலைதடுமாறும்; காதலற மனைவாழ்வில், தலைவி மிகத்தாழ்வதும் நலந்தராது; ஒப்பதுவே மனைமாட்சி வளர்ப்பதாகும். தலைவியினுயர்வு, தலைவனுக்குப் பெருமை உரன்பிறங்காமல் உட்க இடமுண்டாக்கும். அதனால், ஒத்தவர்கள் கூடுவதே இனிமைதரும். ஒவ்வாக்கால், சிறிதுயர்வு தலைவன்பாலாதல் அவர்காதலுக்குத் தீதில்லை, என்றதனைக் கடியாமல் உலகியலிற் காணுதலால் நூல்களு முடன்பட்டுரைக்கும் தலைவியிற்றலைவன் உயர்ந்தோனாதற்குச் செய்யுள்வருமாறு:

“இவளே,
 கானல் நண்ணிய காமர் சிறுகுடி
 நீள்நிலப் பெருங்கடல் களங்கஉள் புக்கு
 மீனெறி பரதவர் மகளே! நீயே,
 நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
 கடுந்தேர் செல்வர் காதல் மகனே
 . . . . . . . . . . . . . . .