தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 405 |
தமிழ்ச்சான்றோர் இருபாலோர்க்கும் இயல்பாகும் ஐயம் ஏற்புழிக் கூறுதலானும், அவருரை தவறென்றறிக. காதற்காட்சியில் இருவருக்கும் போதரும் ஐயம் கூறும் பாட்டு வருமாறு : 1. | “செம்மல ரடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி வெம்முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி, ‘மைம்மலர்த் தடங்கண் நங்கை மரைமலர்த் தேவி’ என்றான்” | | (சிந்தாமணி : 739) |
2. | “வரையின் மங்கைகொல், வாங்கிருந் தூங்குநீர்த் திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல், உரையின் சாய லியக்கிகொல், யார்கொலிவ் விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே” | | (சிந்தா. 1326) |
3. | “விண்ணி னீங்கிய மின்னுரு இம்முறை பெண்ணின் நன்னலம் பெற்றதுண் டாங்கொலோ. எண்ணி னீதல தென்றறி யேன், இரு கண்ணி னுள்ளும் கருத்துளுங் காண்பெனால்” | | (கம்பன். மிதிலைக்காட்சி. 135) |
4. | “வள்ளற் சேக்கைக் கரியவன் வைகுறும் வெள்ளப் பாற்கடல் போன்மிளிர் கண்ணினாள் அள்ளற் பூமக ளாகுங் கொலோ? என துள்ளத் தாமரை யுள்ளுறை கின்றதே” | | (கம்பன். மிதிலைக்காட்சி, 136) |
இந் நான்கு பாக்களும், தலைவன் ஐயுறவுகூறும். முதலிரண்டும், சீவகன் முறையே தத்தையையும், பதுமையையும் முதற்கொண்டு கூறியவை. பின்னிரண்டும் இராமன் சீதையை யாரென அறியாமல் முதலிற் கண்டு காதலாற் கூறியன. 5. | “அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ? கனங்குழை மாதர்கொல்? மாலுமென் நெஞ்சு” | | (குறள்: 1081) |
என்ற குறளும் தலைவனதையமே கூறுகிறது. 1. | “கண்ணெனும் வலையி னுள்ளான், கையகப் பட்டி ருந்தான். பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப் புடைய நம்பி, |
|