பக்கம் எண் :

406நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

எண்ணின்மற் றியாவ னாங்கொல், என்னிதற் படுத்த ஏந்தல்
ஒண்ணிற உருவச்செந்தீ உருவகொண் டனைய வேலான்”

(சிந்தாமணி. 713)

2. “வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ?
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ?
நிணந்தென் நெஞ்சநி றைகொண்ட கள்வனை
அணங்கு காள்! அறி யேன்உரை யீர்களே”
 (சிந்தா. 1311)
3.“அல்லினை வகுத்ததோர் அலங்கற் காடெனும்
வல்லெழு வல்லவோர் மரக தப்பெருங்
கல்லெனு மிருபுயம், கமலங் கண்ணெனும்
வில்லொடு மிழிந்ததோர் மேக மென்னுமால். ”
 (கம்பன். மிதிலைக்காட்சி, 53)

இம்மூன்றும், தலைவனை எதிர்ப்பட்ட தலைவியின் ஐயம் கூறுகின்றன. இவற்றுள் முதலிரண்டும் முறையே தத்தையும் பதுமையும் சீவகனை முன்னறியாமல் முதலிற்கண்டு காதல் கூர்ந்தையுற்றதைக் குறிப்பன. கடைசிக் கம்பன்பாட்டு, சீதை இராமனை யாரென்றறியாமல் காதலெழக்கண்டு அவன் பாற்கொண்ட ‘சிறந்துழி’ ஐயம் குறிப்பதாகும்.

இன்னும் இதுவேபோல், சுந்தரரும் பாவையும் முந்துறத் தாமறியாராய் வந்தெதிரக் கண்டிருவருள்ளத்தும் “எண்கொள்ளாக்காதலின் முன்பெய்தாத ஒரு வேட்கை” எழ. ஒருவரையொருவர் ஐயுற்றுத் தெளிந்ததைத், ‘தெய்வமணம் கமழும்’ பாட்டால் சேக்கிழார் கூறக்காண்பாம்.

4. “கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ,
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ,
அற்புதமோ சிவனருளோ அறியேன்என் றதிசயித்தார். ”
 (திருத்தொண்டர் புராணம். தடுத்தாட்கொண்ட படலம். 140)

இது சுந்தரரின் ஐயம் சுட்டும்.

5. “முன்னேவந் தெதிர்தோன்று முருகனோ, பெருகொளியாற்
றன்னேரில் மாறனோ, தார்மார்பின் விஞ்சையனோ,