தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 407 |
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்
| றுடையவனோ, | என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ? எனநினைந்தார், ” | (மேற்படி 144) |
இது பரவை மனத்தையும் பகர்தல் காண்க. சூத்திரம் : 4 | | | வண்டே இழையே, வள்ளி, பூவே, கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என அன்னவை பிறவும் ஆங்கவ ணிகழ நின்றவை களையும் கருவி என்ப. |
கருத்து : இது, கண்ட காதலர் உளத்தெழுமையம் களைதற் குதவும் கருவிகள் கூறும். பொருள் : வண்டே . . . . அச்சம் என்றன்னவை பிறவும் = வண்டுமுதல் அச்சம் ஈறாக எட்டும் (அவையொத்த மற்றும் குறிகளும்); ஆங்கவண் நிகழ = அவர் எதிர்ப்பாட்டில் நேராநிற்ப; நின்றவை களையும் கருவி என்ப = அந்நிகழ்ச்சிகள் அவர் மனத்தெழுமையம் தீர்க்கும் கருவிகளாம் என்று கூறுவர் களவறநூலோர். குறிப்பு : எதிர்ப்பட்ட காதலர் ஒருவரை மற்றவர், தெய்வமோ, மக்களுள்ளாரோ என்றெண்ணிய ஐயமகல, தெய்வத்துக் கொவ்வாத மக்களுக்கியல்பான குறிநேர்தல் கொண்டே துணிதல் இயல்பு; ஆதலால் ஐயுற்றார் ஆராய்ச்சிக்கேற்ற இயற் குறிகளிங்குச் சுட்டப்பெறுகின்றன. “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்”; ஆதலின் சூழ்ச்சித்துணை (ஆராய்ச்சிக்கருவி) கூறவே. அவற்றாற் றேர்ந்து தெளியும் துணிவு மிதனாற் கூறப்பட்டமை தெளிக. வண்டு, தேனின்மையால் தேவரணிமலர் மேலாடாது, இழை (செய்கலன் மக்கட்குரியது) தேவாணிவது. |