446 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
தவறாகுமே! இனி ஈரிடத்தும் வருங் குட்டங்கள் என்று எழுவாய்க்கும் பன்மைகொள்ள அமையுமென்பார்க்குப் பல இடங்களில் வருதலால் மட்டும் ஒரு பொருள் பன்மையாக மாட்டாது; இரண்டிலும் வருவது குட்ட மென்ற தொன்றே யாகையால், அஃதமையாதெனக்காட்டி மறுத்திடுக. இவ்விடர்ப்பாடு பலவும் பேராசிரியர் உரையில் விலக்கிற்கில்லை. இவை தம்மளவிலேயே இச்சூத்திரத்திற்கு இவ்வுரை பொருந்தாமையை இனிதுகாட்டும். எனில், இப்பொருளிலெழும் முரண்பாடுகளிம்மட்டிலமையா. (ii) இடையடி குறைந்தமை குட்டமெனத் தம் சிறப்புரைப் பகுதியிலிவரே குட்டத்தின் இலக்கணஞ்சுட்டியுள்ளார். எனவே நேரடியிற் குறைந்துவரும் குட்டம் நேரடிக்கொட்டும் என்பது முற்றும் பொருந்தாக் குற்றமாவதன்றிச் சொல்லோடு பொருந்தும் நல்லுரையாகாது. (iii) இனி, நேரடியைத் தமக்குரிமை கொண்ட பாக்களும் இடையடி குறைந்து வருதலையும் கொள்ளுமென்பதையே இச்சூத்திரம் கூறவந்ததென்னின், அதுவுமமையாமை காட்டுவன். இது கூறுவதே ஆசிரியர் கருத்தாயின் “நேரடிப்பாக்களில் குட்டமுந்தோன்றும்” எனச் சுருங்க வமையாமல், ஒத்தாழிசை முதலிய பாவகை எண்ணிப் பின்னும் நேரடிக்கு என விதந்து கூறல் மிகையாகும். ஒத்தாழிசையும் மண்டிலமாகிய ஆசிரியமும் நேரடியே கொள்ளுமாகலான், அவற்றின்கண் குட்டமும் வரும் என்று கூறுவதே போதும்; மீட்டும் ‘நேரடிக்கு’ என்று கூட்டியுரைத்தல் வேண்டா. (iv) ‘ஒத்தாழிசையும், மண்டிலமும், கலியுமாசிரியமுமான பாவகைகளும் குட்டம் எவ்வகைப்பாவிலும் வரத்தகும் சீர்குறைந்த அடியும் என இவர்தம் உரையிற் கூறுவதால் இவற்றை ஆசிரியர் ஒருபடியாக வைத்தெண்ணினாரென்பது அமைவுடைத்தன்று. எல்லாப் பாக்களிலும் வரும் ஒருவித அடியைக் கலி, ஆசிரிய முதலிய பாவகைகளோடு ஒத்து ஒரு சேர நிறுத்தி எண்ணுவது இயைபும் இலக்கண முறையுமாகாது. சீர்குறைந்த அடியான் ‘குட்டம்’ இன்னின்ன பாக்களில் வருமெனலொன்று; அன்றி நேரடியான நாற்சீரடிகளோடு கூடி இடையிடையே வந்து பொருந்துவது முண்டு எனல் ஒன்று; இவ்விரண்டி லொரு இயல் முறையை விடுத்து, நாற்சீரடிவரும் |