452 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இதற்குப் பேராசிரியர் கூறும் பொருளாவது : “மேற்கூறிய மூன்றனையும் இன்னபாவென்பது உணர்த்தினான். அவற்றுள் இறுதிநின்ற மண்டிலமுங் குட்டமும் ஆசிரியப்பாவை உறுப்பாக உடைய” என்றவாறு. இனி, நச்சினார்க்கினியரும், ‘மண்டிலம்’, ‘குட்ட‘மென்று முற்கூறியவையிரண்டும் ஆசிரியப்பாவின்கண்ணே பயில நடக்கும் என்று கூறுவர் புலவர் என்றே இதற்குப் பொருள் கூறினார். இவ்விருவருரையிலுங் காணப்படும் முரண்பாடுகள் பலவாம். மண்டிலம், குட்டம் என்பவற்றிற்குரிய பொருளை இவ்வுரைகார ரிருவரும் இச்சூத்திரத்திற்குத் தாம் கூறும் உரையில் விளக்கவில்லை. முந்திய சூத்திரத்தில் ‘மண்டிலத்தை’ ஆசிரியமெனவும், குட்டத்தைக் குறைந்த அடியெனவும் இவர்கள் கூறியதால், அதுவே போதும்; அப்பொருளை இச்சூத்திரத்திலுமச் சொற்களுக்கு இவர் கொண்டாரென்பதமையுமெனில், அது பொருந்தாமை காண்போம். முதலில் ‘மண்டிலம்’ என்பதே ஆசிரியப் பாவாமானால், அதனைச் ‘செந்தூக்கியல’ என ஆசிரியர் கூறுவது எவ்வாறு இயையும்?செந்தூக்கு என்பதும் ஆசிரியத்தையே குறிப்பதாம். ‘செந்தூக்கென்பது ஆசிரியப்பா என்றவாறு’ என்று பேராசிரியர் இச்சூத்திரத்தின் கீழ், சிறப்புரையில் வற்புறுத்தினார். முன், ‘வஞ்சித்தூக்கே செந்தூக்கியற்றே’ எனும் 71ஆவது சூத்திரத்தின் கீழ் உரையிலும், செந்தூக்கென்பதை இவ்வுரைகாரரும் ஆசிரியமெனவே கூறியமைத்தது மிங்குச் சிந்திக்கத்தக்கது. எனவே ‘ஆசிரியம் ஆசிரியத்தி னியல்புடையது’ என இதில் ஆசிரியர் கூறினார் என்பது நகைக்கிடனாவதன்றி நல்ல பொருளெதுவும் தருவதில்லை. (2) இனி, “ஆசிரியமும் குட்டமும் ஆசிரியப்பாவினை யுறுப்பாக உடைய” எனும் பேராசிரியர் கூற்றுப் பெரிதும் பிழைபடுவதாகும். ஆசிரியமாகிய ‘மண்டிலம்’ ஆசிரியப்பாவினையே தனக்கு உறுப்பாகக் கொள்ளுமா றெங்ஙனம் ஆகும்? ஒருகால் ‘மண்டிலம்’ என்பது ஆசிரியப்பாவகைகளுள் சிலவாகிய ‘நிலை மண்டிலம்’ ‘அடிமறி மண்டிலம்’ மென்ற மண்டலித்துவருமிரண்டனையே குறிக்குமெனினும், ஆசிரியப்பாவினுள் அதன் |