தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 453 |
சிலவகையாயடங்கு மிவ்விரண்டும் தம்மினும் விரிந்த செந்தூக்கா மாசிரியப்பாவினைத் தமக்கு உறுப்பாயுடைய என்பதும் பொருந்தாது. இதுவே போல, “ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப்பாகவுடைய” என இவர் கூறுவதும் பழுதேயாகும். ‘ஒத்தாழிசைக்கலி’ கலிப்பாவகை நான்கனுள் ஒன்றாகும். ‘ஒத்தாழிசை’ கலிப்பாக்களில் வரும் பலவுறுப்புக்களில் ஓருறுப்பேயாகும். எதுவாயினும் கலிப்பாவினை யுறுப்பியாகவும், ஒத்தாழிசையை யுறுப்பாகவும் கூறலாமன்றிக் கலிப்பாவினை ஒத்தாழிசைக்கு உறுப்பெனல் ஒருவகையானும் பொருந்தாது. அன்றியும், (3) ‘குட்டத்தை’ முன் ‘ஒத்தாழிசையும்’ எனவரும் சூத்திரத்தில் சீர் குறைந்துவரும் அடியென்று கூறிவைத்து, இச்சூத்திரத்தின் கீழ்ச் சிறப்புரையில் பேராசிரியர், ‘இணைக்குறள், நேரிசை’ என்ற இரண்டு ஆசிரியப்பாவகைகளே இருவகைக் ‘குட்டமாம்’ என்று குறிப்பது, முன்னுக்குப் பின் முரண்படக் கூறும் குற்றமாகும். ‘குட்டம்’, சீர்குறைந்த அடியையாதல், நேரிசை முதலிய ஆசிரியப் பாவகையையாதல் குறித்தல் வேண்டும். இரண்டில் யாதானுமொன்றையே இச்சூத்திரங்களில் வரும் குட்டத்திற்குப் பொருளாகத் துணிவதைவிட்டு, முன் சூத்திரத்தில் குறைந்தஅடி எனவும், இச்சூத்திரத்திலதையே ஆசிரியப்பாவகை எனவும் கொள்ளுதல் இலக்கண அமைவுடைத்தன்றாகும். பல வேறு பொருளில் ஒரே சொல்லை இலக்கண விதிகளில் ஆசிரியர் கூறி மயங்கவைப்பாரல்லர். (4) மேலும் ‘குட்டத்தை’ ஆசிரியப்பாவகை எனக் கொள்ளின், அப்பொருள் இங்கு ஆசிரியரின் இரு சூத்திரங்களையும் அலமரச்செய்யும். முன்னைச் சூத்திரத்தில் ஆசிரியப்பாவகை நான்கினையும் குறிப்பது ஆசிரியர் கருத்தாயின், ‘ஒத்தாழிசையும் ஆசிரியப்பாவும்’ என்று தெளிவாகக் கூறுவதை விட்டுத் தாம் எங்கும் பொருளை அல்லது இலக்கணத்தை விளக்கிக்காட்டாத “மண்டிலம், குட்டம்” என இரண்டு சொற்கள் பெய்து, ஆசிரியமொன்றைச் சுட்டமாட்டார். அதுவுமன்றி, பேராசிரிய ரிங்குக் கூறுமாறு, மண்டிலம், நாற்சீரடியே யாத்துவரும் நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பாவகைகளை மட்டுஞ்சுட்டி, குட்டம், குறைந்த அடிகளை இடையிடைமிடைந்துயாத்த |