தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 455 |
இவ்விரண்டு கலியுறுப்புக்களும் ஆசிரியத்தூக்கினியல் பெற்று நடக்குந் தன்மையன, என்று புலவர் கூறுப”என்பதே இச்சூத்திரத்துக்குப் பொருந்தும் பொருளாகும். சூத்திரம் : 154 | | | தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும். |
சூத்திரம் : 155 | | | பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவனற்றைந் தனரே. |
இச்சூத்திரங்களுக்கு நச்சினார்க்கினியர், பேராசிரியரது உரையையே வேறுபாடு யாதுமின்றிச் சில சொல் மாற்றங்களுடன் கொண்டு தருதலான், இவ்விருவர் உரையும் ஒன்றேயாகக் காண்கிறோம். முதற் சூத்திரத்தின் கீழ், கொளுவுரையில் பேராசிரியர் ‘வெண்கலி’ என்றதை நச்சினார்க்கினியர் ‘கலிவெண்பா’ என மாற்றினது தவிர, இவருள் வேறு பொருள் மாறுபாடு காணற்கில்லை. இருவரும் இங்குத் தொல்காப்பியச் சூத்திர அடிகளை இரு சூத்திரமாகக் கொண்டு, இருவேறு விதி வகுப்பனவாகக் கருதுகின்றனர். இவற்றுள் முன்னையது அதன் முன்னர்க்கூறிய ‘ஒருபொருள் நுதலிய’ என்னும் (செய். 153) சூத்திரத்திற் கூறிய கலிவெண்பாட்டின் வேறாய் விரவுறுப்புடைமையின், ஆசிரியர் அதனை இங்கு வேறு கூறினதாக ஈண்டு இவ்விரண்டுரைகாரரும் துணிகின்றனர். துணிந்து, இதன்கீழ், “தரவிற்கும் போக்கிற்கும் இடையன பாட்டாகிப் பயின்றும், வேறு நின்ற ஒரு சீரினை அளவடியோடு அடுக்கிக்கூற ஐஞ்சீராகியும், அவ்வாறே இருசீர் அடுக்க அறுசீர் பெற்றும், வெண்பா எனப்பட்ட உறுப்பின் இயற்கை சிதையாமல் பொருள்புலப்படத் தோன்றும்” என்று பொருள் வரைகின்றனர். எனவே செந்துறையாகித் திரிபின்றி யார்க்கும் வெள்ளடியியலால் ஒரு பொருள் கூறும் கலிவெண்பாட்டு வேறு முற்கூறப்பெற்றதும், “தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்தும், ஐஞ்சீரும் அறுசீரும் அடுக்கப்பெற்று வெண்பா இயலான் வெளிப்படத்தோன்றும்” வெண்கலிப்பா வேறு இச்சூத்திரம் கூறுவதெனக்கொண்டு, கலிவெண்பாட்டு இரு கூறுபடுமெனவும், அதனால் ஆசிரியர் இருவேறுசூத்திரங்களால் அவற்றை விளக்கி விதிகள் வகுத்தனர் எனவும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் |