பக்கம் எண் :

456நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஓராங்குக் கூறுகின்றனர். பிறகு, “பாநிலை வகையே. . . . . . நுவன்றறைந்தனரே” என்பதைத் தனிவேறு சூத்திரமாகக் கொச்சகக் கலியாமென்று நூலறிந்த ஆசிரியர் கூறித்துணிந்தனர்” என்று பொருள் கூறுகின்றனர்.

இவ்வாறு இருவேறு சூத்திரங்களாக்கி அவற்றிற்கு இவர்கள் தரும் உரை, ஆசிரியர் கருத்தொடு பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. முன் இருசூத்திரங்களால், வெள்ளடியியலால் திரிபின்றி வரும் கலிவெண்பாட்டு ஒன்று, தரவு முதலிய உறுப்பொடு வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் வெண்கலிப்பா ஒன்று, என இன்னணம் கலிவெண்பா இருவகைத்தென்று ஆசிரியர் கூறக்கருதின குறிப்பை இவர்கள் யாண்டுக் கண்டனர்?அஃதை விளக்குகின்றார்களில்லை. ஆசிரியர் செய்யுளியலில் “பாட்டு உரைநூலே” எனவரும் 79ஆம் சூத்திரத்தால் செய்யுள் எழுவகைப்படும் எனக்கூறிப், பின் “ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே” எனும் 105ஆம் சூத்திரத்தால் பாட்டு நான்கு வகைப்படும் என விளக்கினார். அதன் பிறகு, “ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டே, கொச்சகம், உறழொடு கலிநால் வகைத்தே” என்ற 130ஆம் சூத்திரத்தில் மேற்கூறிய தமிழ்ப்பாவகை நான்கனுள் கலிப்பா நான்கு வகை பெறும் என்று தெளித்தார். இவற்றுள், முதலதான ஒத்தாழிசைக் கலிப்பாவின் இலக்கணம் தொகை வகைகளை “ஒத்தாழிசைக்கலி” எனும் 131ஆம் சூத்திர முதல் “எருத்தே கொச்சகம்” எனும் 152ஆம் சூத்திரம் வரையுள்ள சூத்திரங்களில் ஆராய்ந்தார். இரண்டாவதான கலிவெண்-பாட்டிலக்கணத்தை “ஒருபொருள் நுதலிய. . . . . ” எனவரும் 153ஆம் சூத்திரத்தில் விளங்கக் கூறினார். நான்காவதான உறழ்கலிப்பா இலக்கணம் “கூற்றும் மாற்றமும். . . . . . . . . . . . உறழ்கலிக் கியல்பே” எனும் 156ஆம் சூத்திரத்தால் விளக்க முறுகிறது. எஞ்சிய கொச்சகக் கலிப்பா இலக்கணம், இவ்வுரைகாரர கொள்கைப்படி யாண்டும் விளக்கப்பெறாது ஒழிவதாகும். கலிப்பாவகை நான்கில் மூன்றற்குத் தனித்தனி இலக்கணத்தை விளக்கும் ஆசிரியர் இக்கொச்சகக்கலி ஒன்றற்கு மட்டும் இலக்கணத்தை விளக்காமல் பெயரளவில் சுட்டிச் சூத்திரித்து அமைத்தார் என்பது இயைபுடைய தாமா?கலிவகை நான்கில் இரண்டாவதான “ஒருபொருள் நுதலிய” எனும் கலிவெண்பாட்டிலக்கணச் சூத்திரத்திற்குப் பின்னும், “கூற்று மாற்றமும்” எனும் நான்காவதான உறழ்கலி இலக்கணச்