தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 457 |
சூத்திரத்திற்கு முன்னும், நிறுத்த முறையானே கலியின் மூன்றாம் வகையான கொச்சக இலக்கணம் கூறப்பெறல் வேண்டும்; அதுவே முறையுமாகும். இவ்வுரைகாரர்கள் இவற்றின் இடை நின்றதை இருவேறு சூத்திரமாக்கிக் கொண்டு, ஒன்று முற்கூறிய கலிவெண்பாட்டின் வேறுபாடெனவும், மற்றொன்று கொச்சகமெனவும் கொள்கின்றார்கள். இதில், முன்னையதில் இலக்கணம் மட்டுங் கூறிப்பெயர் எதுவும் கூறப்பெற்றிலது; பின்னையதிற் பெயர்மட்டும் கூறி இலக்கணம் எதுவும் விளக்கப்பட்டிலது. ஆசிரியர் இப்படி வாளா இலக்கணம் கூறிய முற்சூத்திரத்தில் தாம் விளக்க நினைப்பது வெண்கலியின் வேறுபாடே ஆமெனில், அதனை விளங்கக் கூறாது ஒழிவாரா?செய்யுளியல் முழுதும் பாக்களுக்குத் தாம் கூறும் பகுதிகள் மீட்டும் வகைபெற்று வேறுபடு மிடந்தோறும், அவ்வாறு அவற்றுள் ஒவ்வொன்றும் இனைத்து வகைப்படும் எனவும் அவ்வகை ஒவ்வொன்றும் இன்ன இலக்கணம் உடையதெனவும் ஆசிரியர் விளக்கிப் போவதே நியதமாயிருப்பதைக் காண்கிறோம். “ஆசிரியம் வஞ்சி. . . . . . . . நாலியற்றென்ப பாவகை விரியே” (சூத். 105) எனவும், “ஒத்தாழிசைக்கலி. . . . . . . . . . கலிநால் வகைத்தே” (சூத். 130) எனவும், “அவற்றுள், ஒத்தாழிசைக்கலி இருவகைத்தாகும்” (சூத். 131) எனவும் கூறிப், பின்னதின் இருவகை இலக்கணத்தை முறையே “இடைநிலைப்பாட்டொடு” (சூத். 132), “ஏனைய ஒன்றே” (சூத். 138), எனவும், அவ் ஏனைய ஒன்றான புறநிலை ஒத்தாழிசையை“அதுவே, வண்ணகம், ஒருபோகு என இருவகைத்தே” (சூத். 139) எனவும், “ஒருபோகியற்கையும் இருவகைத்தாகும்” (சூத். 147), “கொச்சக ஒரு போகு அம்போதரங்கம் என்று” (சூத். 148) எனவும், இவ்வுட் பகுதிகளினிலக்கணத்தை முறையே “வண்ணகம் தானே” (சூத். 140), “தரவின்றாகி. . . . . . . . . . கொச்சக ஒருபோகு ஆகு மென்ப” (சூத். 149), “அம்போதரங்கம்” (சூத். 151), “எருத்தே கொச்சகம்” (சூத். 152) எனவும் நிரல் நிறையாகச் செவ்விய முறையில் தவிராது கூறிப்போந்த ஆசிரியர், கலிவெண்பாட்டு இருவகைத் தாமென்பது தமது கருத்தாயின் அதனைமட்டும் விளக்காமல் உரைகாரரை உய்த்துணர வையார். அஃதன்றியும், “தரவும் போக்கும். . . வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்” என்பதில் தாம் கூறும் இலக்கணம் எதற்கு எனத் தெளியக் கூறாமலும், ‘தோன்றும்’ என்பதற்கு உரிய எழுவாய் அல்லது முதனிலையை மறைத்தும் மயங்கவையார். இந்நின்ற நிலையில் ‘தோன்றும்’ என்பது பொருண்முடியாமல் |