பக்கம் எண் :

 459

[குறிப்பு: நாவலர் ச. சோ. பாரதியார், 1942இல், இந்நூலை வெளியிட்டபோது, இதனை எட்டயபுரத்தரசருக்குக் கையுறையாய் உரித்தாக்கினார். அஃது இவண் தரப்படுகிறது!] 

இளசை வளநாட்டு வேந்தர், மாட்சிமிக்க திருவளர்ச் செம்மல்,

இராச செகவீர ராம
முத்துக்குமார வெங்கடேசுர
எட்டப்ப நாயக்க ஐயனவர்கள்பால்

எழுமையும் தொடரும் உழுவற் கையுறையாய்

அகத்திணையியற் புத்துரையை ஒப்புவிக்கும்

உரிமையுரை

“மூவேந்தர் குடிமுடிந்து முத்தமிழும் வீழாமல் முழங்க வைப்போர்,
 பாவேந்தர் பாடமறப் பகைமன்னர் பாராட்டப் பாராள் வேந்தர்,
 நாவேந்தர் வாழ்த்தவளர் புகழறம்பல் கலைகளெலாம் நாளும்தங்கள்
 கோவேந்த ரென்றுரிமை கொண்டாடக் கொற்றமுயர் வாகை

கொள்வோர். (1)

பேரால நிழலமர்ந்து பேசாமல் மெய்யுணர்த்தும் பெரியோன்
முன்னாள்
ஓரால முண்டதற்குக் கடவுளரால் இறைவனென உயர்த்தப்
பெற்றான்;
*ஊரால மைந்தினையுண் டோங்கறங்காத் தெண்டிசையு மாணை
போக்கும்
ஏரால மைந்திறைவர் ஏட்டமரென் றிசைபெறுத லியல்பாமன்றே. (2)
 
 
தென்னிளசை மன்னர்வெங்க டேசுரெட்டர் சீர்மரபு சிறக்கத்
தோன்றி
மன்னுபுகழ் மணந்துமகிழ் மகிபனிள வயதில்முதிர் மதியின் மிக்கான்,
கன்னிமுதல் வடவரையுங் கடந்துயரும் புகழ்மரபின் கடவுட்
சால்பால்
தன்னுலகிற் கலிதொலையத் தள்ளாத வளமலியத் தரணி
யாள்வோன். (3)

*  ஊராலம் ஐந்து = பாஞ்சாலக்குறிச்சி