பக்கம் எண் :

460நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மதிமரபன், குளிர்வெண்முழு மதிக்குடையை நிழற்றியறம்
வளர்ப்போன், வாய்மைப்
பதி, படிறு சதிதடியப் பரிவறியான், பாவவியற் பகைவன், மேலோர்
துதிமுத்துக் குமாரவெங்க டேசுரெட்ட துரையென்பால் சுரக்கு
மன்பால்
முதியதமிழ்க் காப்பியரி னகத்திணைக்கென் புதியவுரை முடித்துத்
தந்தேன். (4)
 
பிறந்ததின முதலாகப் பெற்றெடுத்த குரவரினும் பெருகுமன்பாற்
சிறந்ததெலாஞ் செய்துதவிச் சிறியேனை யாளாக்கித் திருவார்கல்வி
துறந்தவரும் விரும்புதமிழ்ச் சுவைஅறிவு தந்தோர்தம் மருகன்,
செவ்வேட்
கிறந்தாலும் பிறந்துழைப்பேன் இவ்வுரையைக் கையுறையாய்
உரித்தாக்கின்றேன். ” (5)
  
‘மலையகம்’ 
 பசுமலை
ச. சோ. பாரதி.
 1. 10. 42