[குறிப்பு : நாவலர் ச. சோ. பாரதியார், இந்நூலை 1942இல், வெளியிட்டபோது, இதனைச் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரவர்கட்குக் கையுறையாய் உரித்தாக்கியுள்ளார். அஃது இங்கே தரப்படுகின்றது. ] மாட்சிமிக்க செட்டி நாட்டு மன்னர், உயர் திருவாளர் டாக்டர் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கு இப்புறத்திணையியற் புத்துரையைப் பாராட்டுக் கையுறையாய் உரித்தாக்கும் வாழ்த்துப்பா 1. | திருவினாலத் திருவையொத்த அறிவினாலு மொருவனாய்க் கருவில்மன்னு திருமணந்த கற்பகத்தி னுற்பவன், பொருவிலாத புகழினோடு புவியிலென்று மன்னனாய் மருவிவாழு மாட்சியுற்று வழியினோர்க்கும் நல்கினோன். |
2. | ஆளுமன்னர் மரபினோர்தம் அறிவிலாத சிறுமையால் நாளும்வீ றிழந்துவீழ, நன்றுசூழு மறிவுசெவ் வேளுமெஞ்சு வினையையாளும் விறலினாலிப் புவியெலாம் நீளும்நல்ல புகழுமன்னர் நிலையுமன்ன நிறுவினோன். |
3. | இகன்மையற்ற வியல்பினால்நல் லின்சொலீர மளைஇஒண் முகனமர்ந்து முறுவலோடு சிலசொலுந் திறத்தினால் தகவளந்து தாழ்விலாமற் சார்வுதீரத் தருதலால் இகபரத்தி றப்பிலாச் சிறப்பையென்று மெய்தினோன். |
4. | இன்னல்யாவு மடமையா லிங்கெழுவ தென்றுணர்ந்தது துன்னலா தொழித்திடத் துணிந்தண்ணா மலைப்பெயர் மன்னமக்க ளறிவுசால்நல் வாழ்வுறத்தன் நிதியினாற் பன்னரும்பல் கலைகளோங்கு கழகமுண்டு பண்ணினோன். |
5. | அறத்தினின்ற அசைவிலாத அறிவினல்ல ஆள்வினைத் திறத்தினின்ற சூழ்ச்சிநன்று தேர்தலொன்று துணிவினாற் சிறத்தலைத்தன் னுரிமைகொண்ட செம்மல்பாற் றொல்காப்பியர் புறத்திணைப்புத் துரைபுணர்த்திப் புகழ்புரிந்து போற்றுகேன். |
| | ‘மலையகம்’ | | பசுமலை | ச. சோ. பாரதி. | 10-11-42 | |
|