[குறிப்பு : நாவலர் ச. சோ. பாரதியார், இந்நூலினை 1942இல் வெளியிட்டபோது, புலவர்க்கும் மாணவர்க்குமென உரித்தாக்கினார். அஃது இவண் தரப்படுகின்றது. ] அறிவு சான்ற புலவருக்கும், அறிவவாவும் மாணவர்க்கும், மெய்ப்பாட்டியற் புத்துரையை உரித்தாக்கும் அன்புரை கரையிலாக் கடலை யொத்த கல்விதந் நிகரில் காட்சி புரையிலா வொழுக்கம் பூண்ட புலவர்க்கு முண்மை காண விரையுநல் லுள்ளந் தூய மேவுமா ணவர்க்கு மெய்ப்பாட் டுரையையென் னன்பினோடு முரிமைசெய் துவக்கின் றேனால். | | ‘மலையகம்’ | | பசுமலை | ச. சோ. பாரதி. | 11-11-42 | |
|