பக்கம் எண் :

463

தொல்காப்பியர் - பொருட்படலம்
மெய்ப்பாட்டிய லுரைப்பாயிரம்

பொருட்படலப் புத்துரையின் பொதுப்பாயிரம் அகத்திணை யியலுரைத் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை இவ்வியலுரையுடனும் கூட்டிப் படிப்பது நயனொடு பயனுதவும்.

மெய்ப்பாடுகள் போலவே உள்ளுறை வகைகளும் சிறிது மயக்கம் தருவதால், அவற்றியல் வேறுபாடுகளைத் தெளித்து விளக்கும்படி வற்புறுத்திய மாணவரின் விருப்பத்திற்கிணங்க, உள்ளுறை விளக்கச் சுருக்கம் இம்மெய்ப்பாட்டியலுரையொடு சேர்த்திருக்கிறது.

  
‘மலையகம்’ 
 பசுமலை
ச. சோ. பாரதி.
 10-11-42