பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை469

2. நண்பகல், 3. எற்பாடு. இரவு = 1. மாலை, 2. யாமம், 3. வைகறை. எனவே சிறுபொழுது ஆறு. இதை மறந்து, ஐந்து என்றால், ஒருபொழுது விடுபட்டு, ஒருநாள் முழுமையாகாது குறைபட்டு நிற்கும். நம்பியார் தம் சூத்திரத்து ஒரு நாளை, நண்பகலொடு, குறைபட நிறுத்துகின்றார்.

5. மேலும் நண்பகல் என்ற சொல்லில், ‘நடு’ எனச் சுட்டப்படுவதால், முன்பகல், பின்பகல் எனப்பட்ட பொழுதுகட்கு இடைப்பட்ட பொழுதே நண்பகல் என அறியலாகும். எனவே, நண்பகல் என்ற சொல்லே, பகல் முப்பொழுது என்பதைத் தெளிவுறுத்துகிறது. இது போலவே, நடுக்கூர்ச் சாமம், நள்ளிரவு என்ற தொடர்களும், இரவின் முக் கூறுபாட்டினை விளக்குகின்றன. மேலும், கணக்காயர் காட்டும் கணக்கான காரணங்களை நூலில் கருதிக் கற்றுத் தெளிக; நம்பியகப் பொருள் இலக்கண நூல் தவறு என அறிக.

5. உடன் கொண்டு போதல் பாலையன்று!

தலைவன், தன் காதலியின் பெற்றோர்க்குத் தெரியாமல், தலைவியைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு போதல் பாலைத் திணையாகும் என உரையாசிரியர் உரைத்தனர். அவர் உரைத்த கருத்தே இன்றுவரை புலவரிடம் செல்வாக்குப் பெற்று வளர்ந்தோங்கி நிற்கிறது. இக்கருத்தானது அகத்திணையின் அழகிய அமைப்புமுறை நெறியொடு பொருந்தியதன்று என நாவலர் பாரதியார் நவில்கின்றார்.

1. குறிஞ்சித்திணை என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் புணர்வு ஒழுக்கமாவது போன்று, பாலைத்திணையும் தலைவன் தலைவிக்கிடையே நிகழும் பிரிவு ஒழுக்கமாகும். தலைவன் தலைவி இவர்கள் ஒருவரை ஒருவர் பிரிதல் மட்டும் பாலையாகுமே யன்றி, இவர்கள் மற்றோரைப் பிரிவதெல்லாம் பாலை எனக் கொள்ள அகப்பொருள் இலக்கணம் இடந்தராது. கொண்டு தலைக்கழிதலில் அதாவது உடன் கொண்டு போதலில், தலைவி, தலைவனுடன், தலைக்கூடிச் செல்வதால் இருவரும் உடன் செல்வதைப் பாலைத்திணை என வகுப்பது, திணைப்பகுப்பு முறைக்குப் பொருந்தாது. பாலை என்பது பிரிதல்.

2.   சிலர் கூறலாம், “தலைவியானவள், தன் பெற்றோரையும், தோழியரையும், சுற்றத்தினரையும் பிரிந்து செல்வதால், இது